பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/559

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

expression

558

extended characters


பார்கள். ஆனால், சாதாரண சொல்தொகுப்பில் படிக்கக் கூடிய வகையில், அஸ்கி கோப்புகளுக்கு ஏற்றுமதி செய்யும் வகையில் உருவாக்குவார்கள்.

expression : சொற்றொடர்;கோவை;வெளிப்பாடு;எண்ணுருக் கோவை; தொனிபாவக் குறிகள் : செயற்பாட்டுக் குறியீடுகள், மாறியல் மதிப்புருக்கள் இவற்றின் இணைப்புகள் ஆகியவற்றைக் கொண்ட எண்களைக் குறிக்கும் பொதுச்சொல். செயல் முறைப்படுத்துவதில் தரவு களையும் செய் முறைப்படுத்து தலையும் விவரிக்கும் ஒரு கட்டளைத் தொடர்.

extended addressing : நீட்டிப்பு முகவரியாக்கம் : நினைவகத்தில் பல இடங்களை எட்டக்கூடிய முகவரிக் குறியீடு. இதற்கு, நினைவகத்தில் தரவுகளின் இடத்தைக் கண்டறிய ஒன்றுக்கு மேற்பட்ட எட்டியல் தேவை.

extended ASCII : நீடித்த ஆஸ்கி : ஆஸ்க்கி (ASCII-American Standard Code for Information Interchange) குறியீடுகள் மொத்தம் 256, 0 முதல் 255 வரை. நமது அன்றாடப் பயன்பாட்டில் 0 முதல் 127 வரை (7 பிட்டுகள்) மட்டுமே பயன்படுத்து கிறோம். 128 முதல் 255 வரை (8 பிட்டுகள்) அரிதாகப் பயன் படுத்தப்படுகின்றன. இந்த மதிப்புகளில் பயன்படுத்தப்படும் குறியீட்டுத் தொகுதிகள் நீட்டித்த ஆஸ்க்கி எனப்படுகின்றன. இவை பெரும்பாலும் கணினிக்கு கணினி வேறுபடுகின்றன. ஆங்கிலம் தவிர வேறுபட்ட மொழி யாளர்கள் தத்தம் மொழியின் எழுத்துகளை இந்தப் பகுதியில் வைத்துக் கொள்கின்றனர். அல்லது உச்சரிப்பு எழுத்துகள், வரைகலை வடிவங்கள், சிறப்புக் குறியீடுகளையும் வைத்துக் கொள்ள முடியும்.

extended board : நீடித்த அட்டை;நீட்டிப்புப் பலகை : மின்சுற்று அட்டை களை வசதியாகக் கண்காணிக்க உதவும்பிழை நீக்குச் சாதனம்.

extended characters : நீட்டித்த குறியீடுகள்;நீட்டித்த எழுத்துகள் : 128 முதல் 255 வரையுள்ள ஆஸ்கி மதிப்புக் கொண்ட எழுத்து வடிவங்கள். விரிவாக்க ஆஸ்கி எட்டு துண்மி (பிட்) களைக் கொண்டிருக்கும். பெரும்பாலும் பிறமொழி எழுத்துகள், பட உருவங்களை உருவாக்கும் குறிகள், உச்சரிப் பைக் குறிக்கும் சிறப்பு அடையாளங்களைக் கொண்டிருக்கும்.