பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/577

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

feature

576

Federation of American


feature : தன்மை; பண்புக்கூறு : ஒரு சொல்பகுப்பி நிரலாக்கத் தொடரில் வலது பக்க இடை வெளி அமைப்பது போன்று ஒரு நிரலாக்கத்தொடரில் அல்லது வன்பொருளில் சிறப்பாக ஏதாவது செய்தல்.

feature extraction : தன்மை கண்டறிதல்; பண்புக் கூறறிதல் : அமைப்பு கண்டறிதலுக்காக மேலோங்கும் தன்மைகள் தேர்ந்தெடுத்தல். கணினி கட்டுப்பாடு ஒளிப்படக் கருவியில் (வீடியோ) வடிவங்கள் மற்றும் முனைகள் போன்ற தன்மைகளைக் கொண்டு பொருள்களை அறியும் திறன்.

federal database கூட்டிணைப்புத் தரவுத் தளம் : ஒரு குறிப்பிட்ட துறை பற்றிய அல்லது சிக்கல் பற்றிய தத்தம் கண்டுபிடிப்புகளையும் பட்டறிவையும் அறிவியல் அறிஞர்கள் சேமித்து வைத்துள்ள ஒரு தரவுத் தளம். ஒரு தனி மனிதரால் தீர்க்க முடியாத அல்லது தீர்ப்பதற்குக் கடினமான சிக்கல்களுக்குத் தேவையான அறிவியல் கலந்தாய்வுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது கூட்டிணைப்புத் தரவுத் தளம்.

Federal Information Processing Standards : கூட்டரசின் தரவு செயலாக்கத் தரங்கள் : அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்க அமைப்புகளுக்குள் நடைபெறும் தரவு செயலாக்கத்திற்கான வழி காட்டுதல்களும் தொழில்நுட்ப வழிமுறைகளும் அடங்கிய செந்தரக்கட்டுப்பாடு.

Federal Privacy Act : ஐக்கிய தனிமைச் சட்டம் : அரசாங்க அமைப்புகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் தனிநபர் பற்றிய இரகசியக் கோப்புகளை வைத்திருப்பதைத் தடுக்கும் ஐக்கியச் சட்டம். அனைத்து அரசாங்க அமைப்புகளிலும் அவர்களது ஒப்பந்தக்காரர்களிடம் தங்களைப் பற்றிய எத்தகைய தரவு, கோப்பில் உள்ளது என்று தனிநபர்கள் அறிந்து கொள்ள இது அனுமதி அளிக்கிறது . Private Act of 1974 என்றும் அறியப்படுகிறது.

Federation of American Research Networks : அமெரிக்க ஆராய்ச்சிப் பிணையங்களின் கூட்டமைப்பு : அமெரிக்க நாட்டிலுள்ள பிணையங்களின் இணைப்புத் தொழில்நுட்பக் குழுமங்களை ஒன்று சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு லாபநோக்கில்லா சங்கம். கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொடர்புடைய சமூகங்களிடையே பிணையங்களை ஒருங்கிணைப்