பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

file gap

585

file level model


பதில்லை. வட்டு நிறைந்து போகின்ற நிலையில் கோப்பினை எழுதவும் படிக்கவும் அதிக நேரம் ஆவதுண்டு. இவ்வாறு கூறுகளாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களை ஒரளவு வரிசையாக எடுத்தெழுதுவதற்கென பயன்பாட்டு நிரல்கள் உள்ளன. 2. ஒரு தரவுத் தளத்தில் அட்டவணைக் கோப்பில் (Tables) ஏடுகள் (Records) வரிசையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. அவ்வப்போது ஏடுகளை அழிக்கிறோம், சேர்க்கிறோம். இதனால் ஏடுகள் கூறாகிக் கிடக்கும். ஆனால் பெரும்பாலான தரவுத் தள தொகுப்புகளில் ஏடுகளை வரிசைப்படுவதற்கென பயன்பாட்டு நிரல்கள் உள்ளன.

file gap : கோப்பு இடைவெளி : கோப்பு எங்கு முடிகிறது என்று கணினி அமைப்புக்கு உணர்த்தக்கூடிய, கோப்பின் இறுதியில் உள்ள இடைவெளி.

file handle : கோப்புக் கைப்பிடி : ஒரு கோப்பினை அணுகுவதற்குரிய தரவுகளை கொண்டுள்ள ஒரு மாறியல் மதிப்புரு. வட்டு அணுகுதலின் கோப்புக் கைப்பிடி முறையைப் பயன்படுத்தி ஒரு கோப்பினைத் திறக்கும்போது DOS மூலம் திருப்பியனுப்பப்படும் ஒரு குறியீட்டு எண். பின்வரும் வட்டுச்செயற்பாடுகள் அனைத்திலும் கோப்பினை அடையாளங் காண்பதற்கு இந்தக் குறியீடு பயன்படுத்தப்படுகிறது.

file handling : கோப்புக் கையாளல்.

file handling routine : கோப்புக் கையாளும் வாலாயச் செயல் முறை : ஒரு கோப்பில் உள்ள தரவுகளைப் படிக்கவோ அல்லது அதனுள் எழுதவோ செய்யக்கூடிய கணினி நிரலாக்கத் தொடரின் ஒரு பகுதி.

file identification : கோப்பு அடையாளம் காணல்.

file index : கோப்புக் குறிப்புப் பட்டியல்; கோப்பு அட்டவணை.

file, index sequential : சுட்டுத் தொடரியல் கோப்பு.

file label : கோப்பு அடையாளச் சீட்டு : ஒரு கோப்பினை அடையாளம் காட்டும் வெளிப்புற அடையாளச் சீட்டு.

file layout : கோப்பு அமைப்புமுறை; கோப்பு இட அமைவி  : அதன் வரிசைமுறை மற்றும் உட்பொருள்களின் அளவுகள் உட்பட தரவுகளை வரிசைப்படுத்தி ஒரு கோப்பில் அமைத்தல்.

file level model : கோப்பு நிலை மாதிரி; கோப்பு நிலைப் படிமம் :