பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/590

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

file sharing

589

file structure


கோப்புகள் அனைத்தின் சேமிப்புத் தொகுதியாகும்.

file sharing : கோப்புப் பகிர்வு : பிணையங்களில் மையக் கணினி அல்லது வழங்கன் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட கோப்பினைப் பல்வேறு பயனாளர்களும் ஒரே நேரத்தில் பார்வையிட, திருத்த, வசதி இருக்க வேண்டும். இவ்வாறு ஒரே நேரத்தில் ஒரு கோப்பினை பலர் கையாள்வது கோப்புப் பகிர்வு எனப்படுகிறது. ஒரே நேரத்தில் வேறு வேறு நிரல்கள் அல்லது வேறு வேறு கணினிகள் பயன்படுத்துகின்றன எனில் கோப்பு விவரங்கள் அதற்கேற்ற வடிவாக்கங்களில் மாற்றப்பட்டு அளிக்கப்பட வேண்டும். ஒரு கோப்பு, பலராலும் கையாளப்படுகிறதெனில் அக்கோப்பினை அணுகுவது, நுழை சொல் (Password) பாதுகாப்பு மூலம் ஒழுங்குப்படுத்தப்படவேண்டும். ஒரே நேரத்தில் ஒரு கோப்பினை ஒன்றுக்கு மேற்பட்டோர் திருத்த முடியாதவாறு கோப்புப் பூட்டு முறை (Fle lock) இருக்க வேண்டும்.

file sharing protocol : கோப்புப் பகிர்வு மரபு முறை : ஒர் இணையத்தில் நிலையங்களிடையே கோப்பு வேண்டுகோள்களுக்கு (திற, படி, எழுது, மூடு முதலியன) ஒரு கட்டமைவை அளிக்கிற செய்தித் தொடர்பு மரபு முறை. இது OSI உருமாதிரியின் படுகை-7 - ஐக் குறிக்கிறது.

file size : கோப்பு அளவு : ஒரு கோப்பில் உள்ள தரவுகளின் அளவை 'பைட்டு' எண்ணிக்கையில் குறிப்பிடுவது.

file spec (file specification) : கோப்புக் குறியீடு : ஒரு வட்டின் மீதுள்ள ஒரு கோப்பின் அமைவிடத்தைக் குறித்தல். இதில் வட்டு இயக்கி, தரவு குறிப்பேட்டுப் பெயர், கோப்புப் பெயர் போன்றவை அடங்கும்.

file storage : கோப்பு சேமிப்பகம் : மின் காந்த வட்டு, நாடா, அட்டை அலகுகள் போன்ற கணினி அமைப்புக்குள் ஏராளமான தரவுகளை வைத்திருக்கும் திறனுள்ள சாதனங்கள்.

file store : கோப்புச் சேமிப்பு.

file structure : கோப்பு வடிவமைப்பு : கோப்புக் கட்டமைப்பு : ஒரு தரவு பதிவுக்குள் புலங்களின் அமைப்பு முறை. சான்றாக, ஒரு பதிவின் முதல் புலம் பெயர்ப்பகுதியாகவும், அதன் இரண்டாவது எண் புலம் விலைப் பகுதியாகவும் அடுத்து மூன்றாவது என்று தொடர்ந்து சென்று கோப்பின் வடிவ அமைப்பினைக் கூறுகிறது.