பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/629

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

freeze columns

628

frequency modulation


விற்பனையாளர் கொடுக்கும் மென்பொருள்.

freeze columns : நெடுக்கைகளை நிலைப்படுத்து.

freeze frame video : உறைசட்ட ஒளிக்காட்சி : உருவம் சில வினாடிகளுக்கு ஒரேயொரு முறை மட்டுமே மாறக்கூடிய ஒளிக்காட்சிப் படம்.

freeze panes : பாளங்களை நிலைப்படுத்து.

frequency : அதிர்வலை;அதிர்வெண்;அலை வரிசை : ஒலி அழுத்தம், மின்சக்தி தீவிரம் அல்லது பிற அளவுகளில் ஒரு அலை தனது சமநிலை அளவுகளில் இருந்து மாறி ஒரு சுழற்சி ஏற்படுவதற்கு அலகு நேரத்தில் எத்தனை தடவைகள் முடிகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. மிகவும் பொதுவான அதிர்வெண் அலை ஹெர்ட்ஸ் (Hz), 1 Hz ஹெர்ட்ஸ் என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி.

frequency counter : அதிர்வெண் எண்ணி;அலைவெண் காட்டி : குறிப்பிட்ட நேர இடைவெளியில் ஒரு மின்சமிக்கை எத்தனை சுழற்சி அடைகிறது என்பதை எண்ணும் மின்னணுச் சாதனம்.

frequency division multiplexing : அலைவெண் பிரிவினைப் பன்முகமாக்கம் : அனுப்பீட்டு ஊடகத்தின் கட்டுக்கம்பிகளில் அனுப்பப்படும் மின்காந்த அலைக்கற்றை, தருக்க முறைத் தடங்களாகப் பகுக்கப்பட் டிருக்கும் பன்முக வடிவம். இந்த வழிகளில் பன்முகச் செய்திகளை ஒரே சமயத்தில் அனுப்பலாம்.

frequency hopping : அலைவரிசைத் துள்ளல் : ஒரு முனைக்கும் இன்னொரு முனைக்கும் இடையேயான தரவுப் பரிமாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட அலைக்கற்றைக்குள் வெவ்வேறு அலை வரிசைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்துதல். இம்முறையினால் அத்துமீறிய குறுக்கீடுகளைத் தவிர்க்க முடியும். ஒற்றை அலைவரிசையை செயலற்றதாக்குவது போல் இதனைச் செய்ய முடியாது.

frequency modulation : அலைவெண் மாறுபாடு : ஒரு குறியீட்டின் அலைவெண், ஈரிலக்க'1'-க்கும்'0-க்குமிடையில் பல விதமாக மாற்றப்படுகிற ஏற்ற இறக்க உத்தி. குறைந்த அலை வெண் 0 ஆகும்.

frequency modulation encoding : அலைவரிசைப் பண்பேற்ற குறியீடு : சுருக்கமாக எஃப்எம் குறியீடு என்றழைக்கப்படும்.