பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

full duplex

632

full name


fuil duplex : முழு இருதிசை இயங்கி;முழு இருவழிப் போக்கு : ஒரு தரவுத் தொடர்பு இணைப்பில் இரு திசைகளிலும் தரவுகளைத் தனித்தனியாக ஒரே நேரத்தில் அனுப்புவது பற்றியது. half duplex மற்றும் simplex ஆகியவற்றுக்கு எதிர்ச்சொல்.

full featured : முழு வடிவம் : ஒரே வகையைச் சேர்ந்த மிக முன்னேறிய உருமாதிரிகளுடன் அல்லது செயல்முறைகளுடன் ஒப்பிடத் தக்க திறம்பாடுகளையும், செயற்பணிகளையும் கொண்ட வன்பொருள் அல்லது மென்பொருள்கள்.

full frame : முழுத் திரை;முழுமைச் சட்டகம் : ஒரு காட்சித் திரையில் பார்க்கக்கூடிய முழுப் பகுதியையும் பார்க்கும் அளவுக்கு ஒரு படத்தின் அளவை மாற்றும் செயல்முறை.

full justification : முழு சீர்மை;இருபுற ஓரச் சீர்மை : சொல் செய லாக்கம் (word processing) அல்லது கணினிப் பதிப்பகப் பணிகளில், ஒரு பக்கத்தில் அல்லது பத்தியில் தட்டச்சு செய்யப்பட்ட வரிகளை இடம், வலம் இரு ஒரங்களிலும் ஒரே சீராக அமைக்கும் செயல்பாடு.

full motion video : முழுதியங்கு நிகழ்படம்;முழுதியங்கு ஒளிக்காட்சி : ஒரு வினாடிக்கு 30 படச்சட்டங்கள் (30 FPS-Frames per second) வீதம் திரையில் காண்பிக்கப்படும் இலக்க முறை ஒளிக்காட்சி (Digital Video).

full motion video adapter : முழுதியங்கு ஒளிக்காட்சி ஏற்பி;முழுதியங்கு ஒளிக்காட்சித் தகவி : கணினியில் பயன்படுத்தப்படும் ஒரு விரிவாக்க அட்டை. ஒளிக்காட்சி நாடாப் பதிவி (Video Casstte Recorder) போன்ற சாதனங்களிலிருந்து இயங்கு நிகழ்படங்களைக் கணினியில் பயன்படுத்தும் இலக்கமுறை வடிவமாக (AVI, MPEG, MJPEG போன்ற வடிவங்களில்) மாற்றித் தரும் அட்டை இது.

full name : முழுப்பெயர் : ஒரு பயனாளரின் உண்மையான முழுப்பெயர். இது, பெரும்பாலும் முதல் பெயர், இடைப் பெயர் (அல்லது இடையெழுத்து), கடைப்பெயர் ஆகிய மூன்று பகுதிகளைக் கொண்டதாக இருக்கும். (எ-டு) டென்னிஸ் எம். ரிட்சி, ஜான் எஃப். கென்னடி ஒரு பயனாளரின் கணக்கு விவரத்தின் ஒரு பகுதியாக அவரைப் பற்றிய சொந்த விவரங்களும் கணினி யில் பதிவு செய்யப்படுவ துண்டு. இயக்க முறைமை ஒரு பயனாளரை அடையாளம்