பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

alphanumeric sort

64

Altair



கணினி முறைமையில் எழுத்தெண் தகவல்களைப் பதிவதற்கும் திரையில் காட்டுவதற்குமான கருவி.


alphanumeric sort : எழுத் தெண் வரிசையாக்கம் : ஒரு பட்டியலை எழுத்து வரிசையில் அல்லது எண்ணேறு முகத்தில் அல்லது இரண்டு வகையிலும் ஆக்கும் கணினிச் செயல்முறை.


aipha photographic : எழுத்தெண் ஒளிக்கீற்று.


alpha test : ஆல்ஃபா சோதனை  : ஒரு மென்பொருள் தொகுப்பினை உருவாக்கி முடித்தவுடன் அது சரியாகச் செயல்படுகிறதா எனக் கண்டறிவதற்கு நடத்தப் படும் முதல்கட்டப் பரிசோதனை. மென்பொருள் தயாரிப்புக் கூடத்திலேயே தயாரிப்பாளரின் கட்டுப்பாட்டில் பயனாளரால் நடத்தப்படும் சோதனை காண்க Beta Test.


alpha testing : முதல் கட்டச் சோதனை : பீட்டா ஆய்வுக்கு உட்படுத்தும் முன்னால் சொந்த நிறுவன ஊழியர் ஒருவர் மூலம் புதிய பொருள் அல்லது பனிைத் தொகுப்பு ஒன்றை ஆய்வு செய்தல்.


alt (key) : மாற்று (விசை).


alternate path routing : மாற்றுவழி திசைவித்தல்.


alternate routing : மாற்றுத் திசைவிப்பு : இரண்டு முனைகளுக்கிடையில் ஒரு வழித் தடத்தில் வழக்கமாகச் செல்லும் தகவலை, கட்டமைப்பில் அதிக போக்குவரத்துக் காரணமாய் வேறு ஒரு வழித் தடத்தில் செலுத்தும் கணினி அமைப்பு.


alternate sector : மாற்றுப் பிரிவு : காந்த வட்டில் ஒரு பிரிவு சோதனையின்போது மோசமானது என்று கண்டுபிடிக்கப் பட்டால் வேறு பிரிவைப் பயன்படுத்துவது.


alternate track : மாற்றுத் தடம் : நேர் அணுகு சேமிப்பகத்தின் குறைபாடுள்ள தடத்திற்கு மாறான தடம்.


alternating current : (AC) மாறு மின்னோட்டம் : ஒரு விநாடிக்கு 50 அல்லது 60 முறை தனது ஒட்டத் திசையை எதிர் எதிராக மாற்றிக் கொள்ளும் மின்சாரம். நேர் மின்சாரத்துக்கு மாறானது.


alternator : மின்மாற்றி


Altair : அல்டேர் (முதல் குறுங் கணினி) : 1974ஆம் ஆண்டின் முதலாவது குறுங்கணினி. எஸ்-100 மின்பாட்டை மூலம் கணினிக்குள் உள்ளே அச்சிடப்பட்ட இணைப்புப் பலகைகள் இணைக்கப்பட்டிருக்கும். அல்டேர் 8800 தொகுப்பு வடிவில்