பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/688

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

head positioning

687

head, write



படிப்பு/எழுது முனைகளுக்கு செலவு அதிகம் என்பதால், இது போன்ற வட்டு இயக்ககங்கள் அதிகமாகப் புழக்கத்திலில்லை.


head positioning : முனை சரியமர்த்துதல் : நேரடி அணுகு சேமிப்பகச் சாதனத்தில் தரவுகளைப் படி/எழுது முனையைப் பொருத்துதல். ஒரு நகரும் அணுகு கரத்தின் மூலம் செய்யப்படுகிறது.

head, read : படிப்பு முனை


head, read/write : எழுது/படிப்பு முனை .


head set : தலைத் தொகுதி : ஒலிச் சாதனங்கள் உண்டாக்கும் இசையை அல்லது ஒலியைக் கேட்பதற்கு தலையில் பொருத்திக் கொள்ளும் ஒலிச் சாதனம். இது கணினிகளுடனும், பிற மின்னணுவியல் சாதனங்களுடனும் சேர்த்துப் பயன்படுத்தப்படுகிறது.


head skew : தலைப்புக் கோட்டம் : தகட்டின் உச்சிப்பகுதியிலிருந்து அடிப்பகுதிக்குத் தலைப்பு மாறிக் கொள்ளும் வகையில் முந்திய தடத்தின் தொடக்கத்திலிருந்து மாறி புதிய தடத்தில் இருக்கும் தூரம்.


head slot : முனை இடம்; தலைத் துணை : வட்டுப் பரப் பினை படி/எழுது முனைக்குக்


: : முனை இடம் ( படம் இணைக்கவேண்டும் )


காட்டும் நெகிழ் வட்டு உறை யின் மீதுள்ள திறந்த இடம்.


head switching : முனை பொத்தானிடம் தலைநிலை மாற்றல் : தரவுகளை நேரடி அணுகு சேமிப்பகச் சாதனத்தில் படிக்கும் போது படி/எழுது முனையை இயங்க வைத்தல்.


head, write : எழுது முனை.