பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

head crash

686

head per track disk drive



தூசு நீக்கும் பொருள். நாடா இயக்கி அல்லது ஒரு நெகிழ் வட்டு இயக்கியின் படி/எழுது முனையைத் தூய்மைப்படுத்த அனுமதிக்கிறது.


head crash : முனை மோதல் : ஒரு நிலைவட்டின் பதிவிடும் பரப்புடன் படி/எழுது முனை யுடன் மோதுதல். சிறிய புகை அல்லது தூசு அல்லது விரல் படுவதுபோன்ற சிறிய பொருளால் வட்டு கெட்டுப்போதல்.


header : வழிகாட்டி தலைப்புச் செய்தி : 1. ஒரு செய்தியை அது போய்ச்சேர வேண்டிய இடத்திற்கு வழிகாட்டுவதற்குரிய அனைத்து தரவுகளும் கொண்டுள்ள ஒரு செய்தியின் முதல் பகுதி. 2. ஒரு பக்கத்தின் மேற் புற மூலை.


header card : வழிகாட்டி அட்டை தலைப்பு அட்டை : தொடர்ந்து வரும் அட்டைகளில் உள்ளதைப் பற்றிய தரவுவைத் தரும் அட்டை.


header file : தலைப்புக்கு கோப்பு : ஒரு கோப்பு பற்றிய குறிப்புரையைக் கொண்டிருக்கும் செயல்முறைக்குள் அதன் உள்ளடக்கங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பு.


header label : தலைப்பு முகப்புச் சீட்டு : ஒரு காந்த நாடாவிலுள்ள ஒரு கோப்பின் தொடக்கத்தில் சேமித்துவைக்கப்பட்டுள்ள ஒரு முகப்புச் சீட்டுப்பதிவு. இது, கோப்புப் பற்றிய விவரிப்புத் தரவுகளைக் கொண்டிருக்கிறது.


header record : வழிக்காட்டிப் பதிவேடு : தொடர்ந்து வரும் பதிவேடுகளின் தொகுதி பற்றிய நிலையான, பொதுவான அல்லது அடையாளம் காட்டும் தரவு வைக்கொண்டுள்ள பதிவேடு.


head-per-track disk : தடவாரித் தலைப்பு வட்டு : ஒவ்வொரு தடத்தின்மீது நிலைநிறுத்தப்பட்டுள்ள படி/எழுது முனையைக் கொண்டுள்ள வட்டு இயக்கி. இதன் மூலம், தடத்திலிருந்து தடத்திற்கு அணுகு கரம் நகர்வது ஒழிக்கப்படுகிறது.


head-per-track disk drive : தடவாரித் தலைப்பு வட்டு இயக்ககம்; தடத்துக்கொரு முனை வட்டு இயக்ககம் : வட்டி லிலுள்ள ஒவ்வொரு தடத்துக் கும் தனியான படிப்பு/எழுது முனை கொண்ட ஒரு வட்டு இயக்ககம். தகவலைப் படிக்கவும் எழுதவும் ஒரு குறிப்பிட்ட தடத்தை அணுக, வட்டு முனை நகரவேண்டிய தேவையில்லாத காரணத்தால், இத்தகைய வட்டு களில் தேடு நேரம் (seek time) மிகவும் குறைவு. ஆனால்,