பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hash search

685

head cleaning device



நிலைமுறை. Hash Coding என்றும் அழைக்கப்படும்.


hash search : புலத்தேடல்; அடையாள வழி தேடல் : ஒரு தேடல் படிமுறை. ஒரு பட்டியலிலுள்ள ஒர் உறுப்பினை அதன் தற்சார்பு முகவரி கொண்டு கண்டறியும் முறை. இத்தேடல் முறையில் ஏறத்தாழ நேரடியாகவே தேடும் உறுப்பினை அணுக முடியும் என்பதால் இம்முறை மிகவும் திறன்மிக்கதாகக் கருதப்படுகிறது.


hash totals : ஹாஸ் மொத்தங்கள்; புல எண்ணிக்கைகள் : புலங்களை அடையாளம் காணும் எண்களின் மொத்தங்கள். பிழை சோதிப்பதில் பயன்படுத்தப்படுகிறது.


hatching : வரிவேய்தல் : வரிவேய்தல் திசையில் இணைக்கோடுகளில் ஒர் ஒவியத்தின் சில பகுதிக்கு மட்டும் நிழலடித்தல், ஒன்றின் மேல் வேறொரு நிறம் அடிப்பது பல குறுக்கு ஹாட்சிங் எனப்படும்.


hayes compatible : “ஹேய்ஸ்” ஒத்தியல்பு : ஹேய்ஸ் நிரல் மொழியினால் கட்டுப்படுத்தப்படும் மோடெம்களைக் குறிக்கிறது.

hayes smart modem : ஹேய்ஸ் அறிவுத்திறன் மோடெம் : "ஹேய்ஸ் மைக்ரோ கம்ப்யூட்டர் புராடக்ட்ஸ்" என்ற அமை வனம் தயாரித்துள்ள சொந்தக் கணினிகளுக்கான அறிவுத்திறன் மோடெம் குடும்பம். இதனை 1958இல் முதல் தலைமுறை சொந்தக் கணினிகளுக்காக ஹேய்ஸ் உருவாக்கினார். இதன் நிரன்மொழி, தொழில்துறைக் குரிய செந்திற மொழியாகியது. இது ஒர் நிரல் நிலையை உடையது; இது அறிவுறுத்தங்களை ஏற்றுக்கொள்கிறது. நேரடிநிலையில் இது சுழற்றுகிறது, பதிலளிக்கிறது; அனுப்புகிறது; ஏற்கிறது.


hazard : இடர்ப்பாடு : உட்பாட்டு மாறிகளின் நிலை மாறுகிறபோது ஒரு தருக்க முறைச் சுற்று வழி தவறாகச் செயற்படுதல்.


ΗDΒΜS : எச்டிபிஎம்எஸ் : Hierarchical Database Management System என்பதன் குறும்பெயர்.


head : முனை : தலைமுனை : 1. சிறிய மின்காந்த வட்டு, நாடா போன்ற சேமிப்பு ஊடகத்தில் தரவுகளை அழிக்கவும், பதிவு களைப் படிக்கவும் பயன்படும் உறுப்பு. காந்தத் தட்டில் தரவுகளைப் படிக்கவும், எழுதவும், அழிக்கவும் பயன்படுவது. 2. ஒரு பட்டியலின் ஆரம்பத்தை அடை யாளம் காட்டும் சிறப்புத் தரவு.


head cleaning device : முனை தூய்மைப்படுத்தும் சாதனம் :