பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/713

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

HPGL

712

HSV



HPGட : ஹெச்பீஜிஎல் : ஹீவ்லெட் - பேக்கார்டு வரைகலை மொழி எனப் பொருள்படும் Hewelet Packard Graphics Language என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். வரைவு பொறிகளில் (Plotters) படிமங்களை அச்சிடுவதற்காக உருவாக்கப்பட்ட மொழி. ஒரு ஹெச்பீஜிஎல் கோப்பு, ஒரு வரைகலைப் படிமத்தை மீட்டுரு வாக்கம் செய்வதற்கான ஆணைகளையும் கொண்டிருக்கும்.

HPIB : ஹெச்பீஐபி : ஹீவ்லெட் - பேக்கார்டு இடைமுகப் பாட்டை என்று பொருள்படும் Hewlest-Packard Interface Bus என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர்.

HP/UX or HP-UX : ஹெச்பி/யுஎக்ஸ் அல்லது ஹெச்பி-யுஎக்ஸ் : ஹீவ்லெட்-பேக்கார்டு யூனிக்ஸ் என்று பொருள்படும் Hewlett Packard UNIX என்ற தொடரின் சுருக்கம். யூனிக்ஸ் இயக்க முறைமையின் ஒரு வடிவம். குறிப்பாக, ஹீவ்லெட் பேக்கார்டின் பணிநிலையக் கணினிகளில் இயக்குவதற்காக வடிவமைக்கப்பட்டது.

. hqx : . ஹெச்கியூஎக்ஸ் : பின்ஹெக்ஸ் (BinHex) எண்முறையில் குறிமுறைப்படுத்தப்பட்ட கோப்பின் வகைப்பெயர் (Extension).

. hr : . ஹெச்ஆர் : ஒர் இணைய தளம் குரோசியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

HREF : ஹெச்ரெஃப் : மீவுரை மேற்குறிப்பு என்று பொருள்படும் Hypertext Reference என்ற தொடரின் சுருக்கச்சொல். ஒரு ஹெச்டிஎம்எல் ஆவணத்தில் பயன்படுத்தப்படும் ஒரு குறி சொல் (tag). இணையத்திலிருக்கும் இன்னோர் ஆவணத்தைச் சுட்டும் தொடுப்பு.

HSB : ஹெச்எஸ்பி : நிறப் பூரிதம் - ஒளிர்மை (பிரகாசம்) என்று பொருள்படும் (Hue Saturation Brightness) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சக்கர வடிவில் அமைந்த ஒரு நிறமாலை அமைப்பு. 0° என்பது சிவப்பு; 60°-மஞ்சள்; 120° -பச்சை; 180° -வெளிர்நீலம்; 240° -நீலம், 300° -செந்நீலம். வெண்மை நிறத்தின் விழுக்காடு அளவு பூரிதத்தைக் குறிக்கிறது.

HSP : ஹெச்எஸ்பீ (உயர்வேக அச்சிடு கருவி) : High Speed Printer என்பதன் குறும்பெயர்.

HSV : ஹெச்எஸ்வி : நிறப் பூரித மதிப்பு எனப் பொருள்படும் Hue Satuaration Value என்ற