பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/714

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

. ht

713

HTTP server



தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

. ht : . ஹெச்டி : ஒர் இணைய தள முகவரி ஹைத்தி தீவைச் சார்த்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

. htm : . ஹெச்டிஎம் : வலைப் பக்கங்களாகப் பயன்படும் ஹைப்பர் டெக்ஸ்ட் மார்க்அப் மொழியின் (HTML) கோப்புகளை அடையாளம் காட்டும் எம்எஸ்-டாஸ்/விண்டோஸ் 3. எக்ஸ் கோப்புவகைப் பெயர். எம்எஸ்-ட்ாஸ் மற்றும் விண்டோஸ் 3. எக்ஸ் ஆகியவை மூன்றெழுத்து வகைப்பெயர்களையே புரிந்து கொள்ளும் என்பதால் . html என்னும் நான்கெழுத்து வகைப் பெயர் மூன்றெழுத்தாகக் குறுக்கப்பட்டு விடுகிறது.

. html : . ஹெச்டிஎம்எல் : வலைப் பக்கங்களாகப் பயன்படும் ஹைப்பர் டெக்ஸ்ட் மார்க்அப் மொழியின் (HTML) கோப்புகளை அடையாளங் காட்டும் வகைப் பெயர்.

HTML document : ஹெச்டிஎம்எல் ஆவணம்.

HTML editor : ஹெச்டிஎம்எல் உரைத் தொகுப்பி.

HTTP : ஹெச்டீடீபீ : மீவுரைப் பரிமாற்ற நெறிமுறை என்று பொருள்படும் Hypertext Transfer Protocol என்ற தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். வைய விரிவலையில் தரவுவைப் பெறுவதற்குப் பயன்படும் கிளையன் /வழங்கன் (Client/Server) நெறிமுறை ஆகும். '

HTTPD : ஹெச்டீடீபீடி : மீவுரை பரிமாற்ற நெறிமுறை ஆவியுரு எனப் பொருள்படும் Hypertext Transfer Protocol Daemon என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஒரு சிறிய வேகம் மிக்க ஹெச்டீடீபீ வழங்கன் (server) கணினி. இது என்சி எஸ்ஏ நிறுவனத்தின் இலவசச் சேவையகம்.

HTTPS : ஹெச்டீடீபீஎஸ் : விண்டோஸ் என்டியில் வலை வழங்கனாகச் செயல்படும் மென்பொருள். ஐரோப்பிய மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் என்டீ அகாடெமி சென்டர் (EMWAC) ஸ்காட்லாந்து நாட்டு எடின்பரோ பல்கலைக் கழகத்தில் உருவாக்கியது. இணையத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வெய்ஸ் (WAIS) எனப்படும் தேடு திறனைக் கொண்டது.

HTTP server : ஹெச்டீடீபீ வழங்கன் : 1. இணைய உலாவியான கிளையன் மென்பொருளின் கோரிக்கையை ஏற்று ஹெச்டீ