பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/730

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

IIR

729

. il. us


படுத்தப்படுகிறது. ஆனால் பொருள்கள், மோட்டார் வாகனங்கள் மற்றும் கணினி முறைமைகளின் கட்டுப்பாட்டுக் கருவிகளாக ஏற்கனவே கையாளப்படுகின்றன.

IIR : ஐஐஆர் : International Institute for Robotics என்பதற்கான குறும்பெயர்.

IIS : ஐஐஎஸ் : இணையத் தகவல் வழங்கன் எனப் பொருள்படும், Internet information Server என்பதன் முதல் எழுத்துக் குறும்பெயர். மைக்ரோசாஃப்ட் உருவாக்கியுள்ள வலை வழங்கன் மென்பொருள்.

. il : . ஐஎல் : ஒர் இணைய தளம் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப் பிரிவுக்களப் பெயர்.

illegal : சட்டப்புறம்பான;முறைகேடான;அனுமதிக்க முடியாத : கணினிச் செயல்பாட்டில் அனுமதிக்க முடியாத நடவடிக்கை. மென்பொருள், வன்பொருள் எதில் வேண்டுமானாலும் ஏற்பட முடியும். (எ-டு) ஒரு சொல் செயலி மென்பொருளில் அனுமதிக்க முடியாத எழுத்து என்பது அந்நிரலால் அறிந்து கொள்ள முடியாத எழுத்தாகும். கணினி இயக்க முறைமை தவறான ஒரு நிரலின் வரம்புமீறிய செயல்பாட்டை ஏற்றுக் கொள்வ தில்லை. 'முறை கேடான செயல்பாடு!'என்று அறிவிக்கப்பட்டு அந்நிரல் முடிவுக்குக் கொண்டு வரப்படும்.

illegal character : ஏற்பிலா எழுத்துரு : முறையான அல்லது தெரிந்த பிரதிநிதித்துவம் என்று கணினியால் ஏற்றுக் கொள்ளப்படாத எழுத்து அல்லது துண்மிகளின் தொகுப்பாகும்.

illuminance : ஒளிர்வூட்டம் : 1. ஒரு குறிப்பிட்ட தளப் பரப்பின்மீது விழுகின்ற ஒளிர்வூட்டும் ஒளியின் அளவு. 2. தொலைக் காட்சிப் பெட்டியின் திரை, கணினித் திரை போன்ற சாதனங்களின் ஒளிர்வூட்டத்தை அளவிடும் அலகு. ஒரு சதுர மீட்டருக்கு எத்தனை வாட்ஸ் என்று அளவிடப்படுவதுண்டு.

Illuminate : ஒளியுமிழ் : ஒளியூட்டும் : வெளிப்படு திரை ஒன்றில் காட்டப்படும் வரை படம் ஒன்றின் ஒளி அளவை, பிரகாசத்தை அதிகரித்தல்.

illustration software : விளக்க மென்பொருள்.

ILUG : ஐஎல்யூஜி : Indian Linux User Group என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

il. us : . ஐஎல். யுஎஸ் : ஒர் இணைய தள முகவரி அமெரிக்க. நாட்டின்