பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/751

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Initial value

750

Inline coding


Initial value : தொடக்க மதிப்பளவு.

initiate : தொடக்கி வை.

initiator : ஸ்கஸ்ஸி (SCSI) இணைப்பிகளில் கட்டளைகள் தரக்கூடிய ஒரு சாதனம். கட்டளைகளைப் பெற்றுக்கொள்ளும் சாதனம் இலக்கு (Target) எனப்படுகிறது.

Initiator terminator : துவக்கும் முகப்பு : உள்ளீடு / வெளியீடு சாதனங்களுக்கு ஒதுக்குவதற்கும் இயக்கப்படுவதற்கு நிரலியிடுவதற்கும் வெளியீட்டை அச்சிடுவதற்கும் வேலை ஒதுக்கீடு செய்யும் ஒரு வழமை.

ink cartridge : மைப் பொதியுறை : பெரும்பாலும் ஒருமையச்சுப் பொறியில் (Ink-jet printer) பயன்படுத்தக்கூடிய மைக்குப்பி. பெரும்பாலும், மை தீர்ந்தவுடன் எறியப்படக் கூடியதாக இருக்கும்.

ink character reader, magnetic : காந்த மையெழுத்துப் படிப்பி.

ink. Jet : மை-பீச்சு : மை வழங்கி : ஒரு அச்சுத் தொழில் நுட்பம். காகிதத்தில் மையினால் சிறிய புள்ளிகளை அமைப்பதன் மூலம் எழுத்துகளை உருவாக்குகிறது. 300 டி. பி. ஐ. அளவுள்ள லேசர் அச்சுப்பொறிகளைப் போன்று அதன் தோற்றம் இருப்பினும் அந்த அளவுக்கு வேகம் இருக்காது.

Inkey : உள்விசை. ஒரு டிபேஸ் நிரலைப் பயன்படுத்துவோர் ஒரு விசையை அழுத்தியவுடன் அதற்குரிய மதிப்பைக் காட்டுவது.

Ink-Jet printer : மை-பீச்சு அச்சுப்பொறி : தாளின் மீது மெல்லிய மை தெளிப்பின் மூலம் அச்சிடும் ஒரு வெளியீட்டுக் கருவி.

inline : உள்ளமை : 1. நிரலாக்கத்தில், ஒரு செயல்கூறின் அமைப்பு இருக்குமிடத்தில் அச்செயல்கூறுக் கட்டளைகளை இட்டு நிரப்பிவிடுமாறு அமைத்தல். முறையான அளபுருக்கள் (parameters) மெய்யான தரு மதிப்புகளால் (arguments) பதிலீடு செய்யப்படுகின்றன. ஒரு நிரலின் செயல்திறனை மிகுவிக்க மொழிமாற்றத் தருணத்திலிலேயே உள்ளமை செயல்கூறுகள் பதிலீடு செய்யப்படுகின்றன. 2. ஹெச்டீஎம்எல் நிரலில் ஒரு வரைகலைப் படத்தை உரைப்பகுதியுடன் உள்ளமைத்து அதனைச் சுட்டுதல். இதற்கு (IMG) என்னும் குறிசொல் (Tag) பயன்படுகிறது.

Inline coding : உள்ளமை ஆணைகள் : ஒரு வடிமையின் முக்கிய பகுதியில் ஒரு இடத்திற்குக் குறியிடுதல்.