பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ANSI/SPARC

76

antenna



ANSI/SPARC : அன்சி / ஸ்பார்க் : அமெரிக்க தேசிய தரக் கட்டுப் பாட்டுக் கழகம்/தரக் கட்டுப் பாட்டுத் திட்டம் மற்றும் தேவைகளின் குழு எனப் பொருள்படும் American National Standards Institute/Standards Planning and Requirements Committee தலைப்பெழுத்துக் குறும் பெயர். 1970-களில் அன்சிக் குழு குறிப்பிட்ட சில தரவுத் தள மேலாண்மை அமைப்புகளின் அடிப்படையாக விளங்கக்கூடிய, பொதுமைப் படுத்தப்பட்ட மூன்றடுக்குக் கட்டமைப்பு ஒன்றை பரிந்துரை செய்தது.


ANSI. SYS : அன்சி. சிஸ் : பயனாளர் தன்விருப்பப்படி கணினித் திரையில் செய்திகளைத் திரையிட அன்சிக் கட்டளைகள் (எஸ்கேப் வரிசை) பயன்படு கின்றன. இத்தகைய கட்டளைகள் அடங்கிய, எம்எஸ்-டாஸ் கணினிகளில் நிறுவப்படத் தக்க சாதன இயக்கிக் கோப்பு 'அன்சி. சிஸ்' என்றழைக்கப்படுகிறது.


ANSI terminal : அன்சி முனையம் : தரமான அன்சி மொழியில் உள்ள ஆனைகளைப் பின்பற்றும் காட்சி முனையம்.


answering machine : விடையளிக்கும் பொறி; விடைப் பொறி : வரும் செய்திகளைச் சேகரிப்பது. முற்பதிவு செய்திகளை அழைத்தவருக்கு அனுப்பி, பதில் அளிக்க வேண்டியவர் இல்லாத குறையைத் தீர்க்கும் பொறி.


answer mode : விடைப் பங்கு : வேறொரு இணக்கி (மோடெம்) யிலிருந்து வரும் அழைப்பை, இணக்கி (மோடெம்) ஒன்று ஏற்கும் நிலை .


answer only modem : தகவல் பெறு இணக்கி; அழைப்பேற்பு இணக்கி; பதிலுக்கு மட்டுமான இணக்கி : இவ்வகை இணக்கிகள் வருகின்ற தகவல்களை ஏற்கும். ஆனால் தகவல் அனுப்பும் திறன் அற்றவை.


answer / originate : விடையளி / தொடககு


answers / originate modem : தகவல் பெறு/தரு இணக்கி : இவ்வகை இணக்கிகள் தகவல் அனுப்பவும் அழைப்புகளை ஏற்கவும் திறனுள்ளவை. பொதுவாக இவ்வகை இணக்கிகளே புழக்கத்தில் உள்ளன.


answer tone : விடை ஒலி : இணைக்கி (மோடெம்) பதில் கொடுத்துவிட்டது என்பதை அழைத்தவருக்குக் கூறும் ஒலிக் குறிப்பு.


antenna : மின்காந்த அலை வாங்கி.