பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/786

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

interrupt, automatic

785

Interrupt priorities



பாட்டினை மாற்றுவதற்கான சமிக்கை. குறுக்கீடு செயல்படுத்தப்பட்ட பிறகு, நிரல் தொடரின் கட்டுப்பாடு மீண்டும் குறுக்கிடப்பட்ட நிரல் தொடருக்கே திரும்பிவிடும்.

interrupt, automatic : தானியங்கு குறிக்கீடு; தானியங்கு இடைமறிப்பு.

interrupt controller : குறுக்கீட்டு கட்டுப்படுத்தி.

interrupt-driven : குறுக்கீட்டு-இயக்கி; இடை மறிப்புத் தூண்டல் : குறுக்கீடுகளைப் பயன்படுத்தும் கணினி அல்லது தரவுத் தொடர்பு கட்டமைப்பு.

interrupt-driven processing : குறுக்கீட்டு முடுக்கச் செயலாக்கம் : ஒரு குறுக்கீடு (interrupt) மூலம் கோரிக்கை கிடைக்கப்பெற்றவுடன் நடைபெறும் செயலாக்கம். கோரிக்கை நிறைவேற்றப்பட்ட பின் மையச் செயலகம் (CPU) அடுத்த செயலை நிறைவேற்றத் தயாராக இருக்கும். அடுத்து செய்யவிருக்கும் பணி முன்பு விட்டு வந்த பணியாகவோ, இன்னொரு குறுக்கீடு மூலம் உணர்த்தப்படும் பணியாகவோ இருக்கலாம். பயனாளர் விசைப் பலகையில் ஒரு விசையை அழுத்துவது, நெகிழ் வட்டகத்தில் ஒரு வட்டினைச் செருகியதும் அது தரவு பரிமாற்றத்துக்கு தயார் நிலையில் இருத்தல் போன்றவை குறுக்கீட்டு முடுக்கச் செயலாக்கங்களாகும்.

Interrupt handler : குறுக்கீடு கையாள்பவர் : குறுக்கீடு ஏற்படும்போது தேவையான வேலைகளைச் செய்யும் நிரலாக்கத்தொடரின் ஒரு பகுதி.

Interruption : குறுக்கீடுதல் : நிரல்களை வழக்கம்போல் தொடர்ச்சியாக இயக்குவதில் ஏற்படும் தடை.

interruption, machine : எந்திர குறுக்கீடு; எந்திர இடைமறிப்பு.

Interrupt mask : குறுக்கீடு மூடி, இடை மறிப்புத் திரை : ஒரு குறுக்கீட்டை செயலாக்கம் செய்யலாமா? வேண்டாமா? என்பதற்கான கட்டுப்பாட்டை இயக்கும் உள்ளார்ந்த பொத்தான். நிரல் தொடரினால் அவ்வப்போது மூடி, திறக்கப்படும் ஒரு துண்மியே மூடியாகும்.

Interrupt priorities : குறுக்கீட்டு முன்னுரிமைகள் : குறுக்கீடுகளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் வரிசை முறை. ஒரே நேரத்தில் இரண்டு குறுக்கீடுகள் ஏற்படுமானால், அதிக முன்னுரிமை உள்ள