பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/813

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

K

812

. ke


K


K : கே : 1. கிலோ என்பதன் சுருக்கம். பதின்ம எண்ணில் 1000 என்பதைக் குறிப்பிடும். சான்றாக 100K ch/s என்றால் ஒரு நொடிக்கு 100, 000 எழுத்துகள் அளவு படிக்கும் வேகம். 2. சேமிப்புத் திறனில் 2-ன் 10 மடங்கு என்பது பதின்ம எண் முறையில் 1024, 8K என்பது 8192 அதாவது 8 x 1024.

Kale : கேல்  : கேல் கன்சல்டன்ஸ் நிறுவனம் இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறு வனங்களில் ஒன்று.

Kansas city standard : கன்சாஸ் நகர தர நிருணயம் : குறைந்த வேக ஒளிப்பேழை (கேசட்) சேமிப்பு வடிவம்.

Karnaugh map : கார்னாக் வரை படம் : உண்மைப் பட்டியலின் இரு பரிமாண அமைப்பு.

Kb : கேபி : kilo byte என்பதன் குறும்பெயர்.

Kbits/Sec (KiloBits per SECond : கேபிட்ஸ்/செக் : Kilobits per Second என்பதன் குறும்பெயர். ஒரு நொடிக்கு ஆயிரம் துண்மிகள்.

KBps, Kbps (KiloBytes per Second, KiloBits per Second : கேபிபீஎஸ் : Kilobytes per Second, Kilobits per Second என்பதன் குறும்பெயர்கள். ஒரு நொடிக்கு ஆயிரம் எட்டியல்கள், ஆயிரம் துண்மிகள்.


KBS : கேபிஎஸ் : ஒரு நொடிக்கு ஒரு கிலோ எட்டியல்கள் (1024 எட்டியல்கள்)

K-Byte (Kbyte or KB) : கே-எட்டியல்கள் : Kbyte or KB என்பது ஏறக்குறைய ஒரு ஆயிரம் எட்டியல்கள். துல்லியமாக 210 அல்லது 1, 024 எட்டியல்கள்.

Kbytes/sec (Kilobytes per second) : கேபைட்ஸ்/செக் : Kilobytes per Second என்பதின் குறும்பெயர். ஏறக்குறைய ஒரு நொடிக்கு ஒராயிரம் எட்டியல்கள்.

Kc : கேசி : ஒரு நொடியில் ஆயிரம் எழுத்துகள். தரவு மாற்றல் இயக்கங்களின் விகிதத்தைக் குறிப்பிடப் பயன்படுகிறது.

KCS : கேசிஎஸ் : ஒரு நொடிக்கு ஆயிரம் எழுத்துகள் அல்லது கிலோ எட்டியல்கள் என்பதன் சுருக்கம்.

. ke : . கேஇ : ஒர் இணைய தள முகவரி கென்யா நாட்டைச்