பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/816

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

keyboard controller

815

keyboard interrupt


keyboard controller

தில் தங்கியிருக்கும். செயலி மற் றும் புறநிலைச் சாதனங்களுக்கு இடையே நிலவும் செயல் பாட்டு வேக வேறுபாடு காரண மாக இது போன்ற இடைநிலை நினைவகத்தில் உள்ளீட்டு/ வெளியீட்டுத் தரவுகளை சேமிக்க வேண்டி யுள்ளது.

Keyboard controller : விசைப்பலகை கட்டுப்பாட்டுப் பொறி : அடித்த விசைகளைக் கண் காணித்து அழுத்தப்படும்போது தரவு துண்மிகளை உருவாக்கும் விசைப்பலகை.

keyboard enhancer : விசைப்பலகை மேம்படுத்தி : விசைப் பலகையில் அழுத்தும் விசை களைக் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒரு நிரல். அழுத்தும் விசையின் அல்லது விசைகளின் விளைவை மாற்றியமைக்க இந்த நிரலால் முடியும். ஒரு விசையை அழுத்தியவுடன் ஒரு நிரல் கூறினை இயங்க வைக்க முடியும்.

Keyboarder : விசைப்பலகை அமைப்பவர் : தட்டச்சு, சொல் செயலி அல்லது கணினி முகப்பின் விசைப் பலகையைப் பயன்படுத்துதல்.

Key boarding : விசைப் பலகை யிடல் : உள்ளிட்டு ஊடகத்திலோ அல்லது நேரடியாக கணினி யிலோ விசைப் பலகையில் தட்டச்சு செய்வதன் மூலம் தரவு களையும் நிரல் தொடர்களை யும் நுழைக்கும் செயல்முறை. கணினி முனையம் அல்லது சொல்செயலிகளில் விசைப் பலகைகளைப் பயன்படுத்துவது போன்றது.

Keyboard initialisation : விசைப் பலகை ஆரம்பித்தல் பல கணினிகளை இயக்கத் துவங்கும்போது செய்யப்படும் நடைமுறை. ரோம் பயாஸ் நினைவகம் இதைத் துவக்கி சரியான விசைப்பலகை மின்னிணைப்பு பெறப்பட்டதா, சரி யான ஸ்கேன் குறியீடுகள் இணைக்கப்பட்டதா என்பதை சோதிக்கிறது. NUM LOCK LED வருமானால் சரியான விசைப் பலகை ஆரம்பிக்கப்பட்டதாகப் பொருள்.

Keyboard interrupt : விசைப்பலகை குறுக்கீடு ஒரு விசையை அழுத்தும்போதோ அல்லது விடும்போது செய்யப் படும் வன்பொருள் குறுக்கீடு. விசைப்பலகை நுண் செயலகத் தில் இருந்து வரும் நுண்ணாய்வு (ஸ்கேன்) கோடுகளை நிரலாக் கத் தொடர் பயன்படுத்திக்கூடிய குறியீடுகளாக மாற்றி விசைப் பலகை இடை நினைவகத்தில் இக்குறியீடுகளை நுழைக்கிறது.