பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/822

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Keyword analysis

821

killer app


யாக்கம் அல்லது தேடல் செயல்பாடுகளை மேற்கொள்வற்கு பயன்படுத்தப்படும் சொல் அல்லது சொல்தொடர் அல்லது குறிமுறை. இது, தரவுத்தள அட்டவணையின் திறவுப் புலத்தில் (key field) இடம் பெற்றுள்ளதாயிருக்கும்.

Keyword analysis : முதன்மைச்சொல் ஆய்வு : ஒரு சொற்றொடரின் உள்ளடக்கங்களை ஆராயும் எளிமையான ஆனால் மிகவும் மோசமான முறை. முக்கிய சொல் ஆய்வு என்று அமைப்பு இணைக்கும் நுட்பம் அழைக்கப்படுகிறது.

keyword-in-context : சூழ்நிலையில்யில் முதல் சொல்; சூழலில் திறவுச்சொல் : ஒரு தானியங்கு தேடல் வழிமுறை. ஆவண உரை அல்லது தலைப்புகளை அடையாளங்காட்டுவதற்கான சுட்டுக் குறிப்புகளை உருவாக்கிக் கொள்ளும். ஒவ்வொரு திறவுச் சொல்லும் அதைச் சுற்றிய உரைப் பகுதியுடன் சுட்டுக்குறிப்பில் பதிவு செய்யப்படும். பெரும் பாலும் ஆவண உரை அல்லது தலைப்புகளில் திறவுச் சொல்லுக்கு முந்தைய அல்லது பிந்தைய சொல் அல்லது சொல் தொடராக இருப்பதுண்டு.

keyword search : திறவுச்சொல் தேடு.

. kh : கேஹெச் : ஒர் இணையதள முகவரி கம்போடியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

Khornerstones : திருப்பு முனைகள் : மையச் செயலகம் உள்ளீடு /வெளியீடு மற்றும் மிதக்கும் புள்ளி செயல்பாட்டை சோதித்துத் தரமறியும் நிரலாக்கத் தொடர்.

KHz : கே எச் இஸ்ட் : கிலோ ஹெர்ட்ஸ் என்பதன் குறும் பெயர். ஒரு நொடிக்கு ஒராயிரம் சுழற்சிகள்.

. ki : கேஐ : ஒர் இணையதள முகவரி கிரிபேட்டி நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.

Kilby jack : கில்பி ஜேக் : 1958 இல் ஒருங்கிணைந்த மின்சுற்றை அறிமுகப்படுத்திய டெக்சாஸ் கருவிகள் நிறுவனத்தின் கண்டுபிடிப்பாளர். கையில் வைத்துக் கொள்ளக்கூடிய ஆரம்பகால கணிப்பானையும் அவர் கண்டுபிடித்தார்.

Kil : கொல் : 1. அதன் வழக்கமான முடிவை அடைவதற்குள் ஒரு செயலை நிறுத்துதல் அல்லது நீக்குதல். 2. தரவுவை அழிக்கும் முறை.

killer app , அதிரடிப் பயன்பாடு : ஒரு திருப்பு முனையை

ஏற்படுத்துகின்ற செல்வாக்கான