பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/823

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Kilo

822

kinesis ergonomic keyboard


மென்பொருள். இந்த மென்பொருள் விற்பனையில் ஒரு சாதனையை நிகழ்த்தும். அது மட்டுமின்றி இதன் விற்பனை காரணமாய் இது செயல்படும் இயக்க முறைமை அல்லது இது செயல்படும் வன்பொருளின் விற்பனையும் அதிகரிக்கும்.

Kilo : கிலோ : மெட்ரிக் அளவு. ஒரு ஆயிரத்தைக் குறிப்பது. 10-ன் 3 மடங்கு. K என்று சுருக்கி அழைப்பது.

Kilobaud : கிலோ பாட் : ஒரு நொடிக்கு ஆயிரம் பாட். தரவுத் தொடர்பு வேகங்களை அளக்கப் பயன்படுவது.

Kilobit : கிலோ துண்மிகள் : ஆயிரம் துண்மிகள்.

kilobits per second : ஒரு வினாடியில் கிலோ பிட்டுகள் : சுருக்கமாக கேபிபீஎஸ் (kbps) என்று குறிக்கப்படுகிறது. ஒரு பிணையத்தில் தரவு பரிமாற்றத்தின் வேகத்தை அளக்கப் பயன்படுத்தப்படும் அளவீடு. ஒரு வினாடியில் 1024 துண்மி (பிட்) என்ற வேகத்தின் மடங்காக அளவிடப்படுகிறது.

Kilobyte : கிலோ எண்மிகள் : 2-ன் 10 மடங்கு (210) அல்லது 1024 எண்மிகளைக் குறிப்பிடுவது. பொதுவாக 1000 - என்று கருதப்பட்டு K என்று சுருக்கி அழைப்பது. 24 கே என்பது. 24x1024 அல்லது 24, 576 எட்டியல் நினைவு அமைப்புக்குச் சமமானது. Kb என்றும் சில சமயம் சுருக்கி அழைக்கப்படும்.

Kilocycle : கிலோசைக்கிள் : ஆயிரம் சுழற்சிகள். ஒரு நொடிக்கு ஆயிரம் சுழற்சிகள் என்று முன்பு அழைக்கப்பட்டது. இப்போது கிலோ ஹெர்ட்ஸ்.

Kilo cycles per second : நொடிக்கு இத்தனை கிலோ சுழற்சிகள் : ஒரு நொடிக்கு ஆயிரம் சுழற்சிகள்.

Kilohertz : கிலோ ஹெர்ட்ஸ் : ஒரு நொடிக்கு ஒராயிரம் சுழற்சி. தரவு அனுப்புதல் சுழற்சியை அளக்கப் பயன்படுகிறது.

Kilomegacycle : கிலோ மெகா சைக்கிள் : ஒரு நொடிக்கு ஒரு நூறாயிரம் கோடி சுழற்சிகள்.

Kinematics : இயக்க வடிவியல் : கணினி அமைப்பு வடிவமைக்கும் ஒரு அமைப்பு அல்லது ஒரு எந்திரத்தின் பகுதிகள் இயங்குவதை அசைவூட்டம் (அனிமேஷன்) மூலம் காட்டுவது அல்லது வரைவி (பிளாட்டிங்) ஆகியவற்றில் கணினி உதவிடும் பொறியியல் செயல்முறை.

kinesis ergonomic keyboard : கினிசிஸ் சூழலியல் விசைப்பலகை : தொடர்ந்து விசைப்பலகையில் பணியாற்றுவதால் சோர்வும் உலைவும் ஏற்