பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/837

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

layout character

836

LCD Projector


காகிதத் தொகுதி. வரைபட முறை எக்ஸ்-ஒய் ஒருங் கிணைப்புகள் மூலம் அல்லது வரிசைகள், பத்தி கள் முறையில் சொற்கள் வரைபடங்களைக் காட்டுதல்.

layout, character : எழுத்து உருவரை.

lazy evaluation : செம்மல் மதிப்பாய்வு : மடி மதிப்பாய்வு : தேவையானபோது மட்டும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள் மதிப்பாய்வு மேற்கொள்ள அனுமதிக்கும் ஒரு நிரலாக்க நுட்பம். மிகப் பெரிய அட்டவணைகள் மற்றும் பட்டியல்கள் போன்ற தரவு கட்டமைப்புகளை சரியான நேரத்தில் திறன்மிக்க முறையில் கையாள்வதற்கு மடி மதிப்பாய்வு முறை உதவுகிறது.

. lb : . எல்பி : ஓர் இணையதள முகவரி லெபனான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

. lc : . எல்சி : ஓர் இணையதள முகவரி செயின்ட் லூசியா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக்களப்பெயர்.

LCD : எல். சி. டி : Liquid Crystal Display என்பதன் குறும்பெயர். சிறப்பு படிகப் பொருளின் மீது ஒளி யைப் பிரதிபலிப்பதன் மூலம் எழுத்து களும் எண்களும் தெரியும் அமைப்பு. அதிக ஒளி இருக்கும்போது மிக நன்றாகத் தெரியும். குறைந்த வெளிச்சத்தில் சரியாகப் பார்க்க முடியாது. அதன் குறைவான அளவின் காரணமாக, பாக்கெட் கணிப்பான்கள், கணினிகள், பெட்டி கணினிகள், விசைப் பலகைகள், கடிகாரங்கள் மற்றும் பல சாதனங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

LCD panel : எல். சி. டி. பேனல் : மேற்செலவு திட்டத்தில் ஒவர் ஹெட் புரொஜக்டரில் வைக்கக் கூடிய, உள்ளே தெரியும் படிகத் திரையில் காட்டு கின்ற கணினி வெளியீட்டை ஏற்றுக்கொள்ளும் தரவு திட்டம்.

LCD printer : எல். சி. டி. அச்சுப்பொறி : மின் புகைப்பட முறை அச்சுப்பொறி. அது திரவ படிக மூடிகள் இயக்குகின்ற தனி ஒளி மூலத்தைப் பயன்படுத்துகிறது.

LCD projector : எல். சி. டி. படப்பெருக்கி : நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி மூலம் பெரிய திரையில் படமாகக் காட்டும் கருவி.