பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/841

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

left shift

840

Leibniz



left shift : இடம்பெறும் மாற்று : இடதுபுறத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு பதிவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு துண்மியையும் மாற்றச் செய்தல்.

legacy : மரபுரிமை; மரபுவழி : கொஞ்ச காலத்துக்கு முன்பு நிலவிய ஆவணங்களை அல்லது தரவுகளைப் பற்றியது. ஒரு செயலாக்கத்தில் அல்லது தொழில்நுட்பத்தில் ஏற்படுத்துகிற ஒரு மாற்றத்தைக் குறிப்பாக உணர்த்துகிறது. இந்த மாற்றத்தின் காரணமாக, பழைய தரவு கோப்புகளைப் புதிய முறை மைக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியிருக்கும்.

legacy data : மரபுவழித்தரவு : ஒரு நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு இன்னொரு நிறுவனத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஏற்றுக் கொள்ளும் நிறுவனம், இருக்கும் தரவுவை மரபுரிமையாக தகவலின் முந்தைய உடைமையாளரிடமிருந்து பெறுகிறது.

legacy hardware : பேற்றுவன் பொருள்

legacy system மரபுவழி முறைமை : ஒரு வணிக நிறு வனம் அல்லது அலுவலகத்தில் புதிய கணினி அமைப்புகளை நிறுவிய பிறகும் பயன்பாட்டில் இருக்கும் ஒரு பழைய கணினி மென்பொருள், கணினிப் பிணையம் அல்லது பிற கணினிக் கருவிகளைக் குறிக்கும். புதிய பதிப்புகளை நிறுவும் போது மரபுவழி முறைமைகளுடன் ஒத்திசைவு உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும். (எ-டு) இருக்கின்ற வணிகப் பரிமாற்ற விற்று வரவு ஏடுகளை, புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள விரிதாள் மென்பொருள், செல வும் நேரமும் அதிகம் எடுத்துக் கொள்ளும் புதிய வடிவ மாற்றம் எதுவுமின்றி ஏற்றுக் கொள்ளுமா? பெரும்பாலான மரபு வழி முறைமைகள் பெருமுகக் கணினி அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. இப்போது பெரும்பாலான நிறுவனங்களில் அவை கிளையன்/வழங்கன் கட்டுமானம் மூலம் மாற்றீடு செய்யப்பட்டு வருகின்றன.

legend : படக்குறிப்பு : ஒரு வரை கலைப் படத்தின் அடியில் அதனை விளக்கி விவரிக்கும் உரைப்பகுதி. ஒரு வரைபடத்தில் அல்லது இயல் படத்தில் படக்குறிப்பு என்பது வரைபடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள தோரணி அல்லது குறியீடுகளை விளக்குவதாக இருக்கும்.

Leibniz : லீப்னிஷ் : கோர்டிஃ பிரைடுவான் (1646-1716) ஜெர்