பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/842

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Leibniz’s calculator

841

less than


மானிய கணித வல்லுநர். கணக்கிடும் எந்திரத்தை 1672 இல் கண்டுபிடித்தார். அந்த எந்திரம் கூட்டல், கழித்தல், பெருக்கல் ஆகிய வேலைகளைச் செய்யக் கூடியது.

Leibniz's calculator : லீப்னிஷ் கணிப்பி. கோட்ஃபிரைடு வான்-லீப்னிஷ் என்பவர் வடிவமைத்த கணக்கிடல் பொறி. பாஸ்கலின் கணிப்பிபோல கூட்டல், கழித்தல் செய்யவல்லது. கூடுதல் பற்சக்கரங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால் நேரடியாக பெருக்கல் வேலையையும் செய்யக் கூடியது.

Lempel Ziv : லெம்பெல் சிவ் : ஏற்ப்புடை சுருக்கும் நுட்பத்தினைப் பயன்படுத்தும் தரவு சுருக்கும் அல்கோரிதம்.

lempelziv algorithm : லெம்பெல் சிவ் படிமுறை : தரவு கோப்புகளை அவற்றின் உள்ளடக்கத்திற்குப் பங்கமின்றி அளவினைச் சுருக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கணிதப் படிமுறைத் தருக்கம்.

len : லென் : ஒரு சரத்தின் நீளத்தைத் திருப்பி அனுப்பும் கட்டளை. LEN (JUNE) என்ற கட்டளை4 என்ற விடையைத் தரும்.

length : நீளம் : எழுத்துகளுக்கான எண்மிகள் எண்ணிக்கை அல்லது கணினி சொல் ஒன்றில் உள்ள துண்மிகள். ஒரு மாறும் சொல் பல எழுத்துகளால் ஆனது. ஆனால் சிறப்பு முடிவு எழுத்தைக் கொண்டது. நிலையான சொல் என்பது ஒரே எண்ணுள்ள துண்மிகளால், அல்லது எண்மிகளால் அல்லது ஒவ்வொரு சொல்லிலும் உள்ள எழுத்துகளால் ஆனது.

length, block : தொகுப்பு நீளம்; தொகுதி நீளம்.

length, fixed block : மாறாத் தொகுதி நீளம்.

length, record : ஏட்டின் நீளம்.

length record, fixed : மாறாநீள ஏடு .

Leo : லியோ ; லியோன்ஸ் எண்ணும் இங்கிலாந்து நிறுவனம் உருவாக்கிய லியோனின் மின்னணு அலுவலகம் என்பதன் சுருக்கம். 1947இல் துவக்கிய ஒரு திட்டத்தின்படி அவர்கள் அலுவலகத்தின் எழுத்தர்கள் செய்யும் வேலைகளை கணினி மூலம் செய்ய கணினியை உருவாக்கினார்கள்.

Leo-III : லியோ-III : அதன் காலத்திற்கு மிகவும் முன்னேறிய வணிக எந்திரமான முதல் தலை முறை கணினி.

less than : விடக் குறைவு : குறைவாக, சமமற்ற இரு மதிப்பீடு