பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/843

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

less time

842

letter shift


களுக்கிடையிலான உறவு. குறியீட்டின் முனைப் பகுதி சிறிய எண்ணைச் சுட்டுவதாக இருக்கும். 3 less than 8 StaölpTab 3 எனும் எண் எட்டைவிடக் குறைவானது என்று பொருள். ஒப்பீட்டில் மாற்று வகைப்படுத்துதலைத் தீர்மானிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது.

less time : குறைந்த காலம்.

letter : எழுத்து; மடல்.

letter bomb : கடிதக்குண்டு : பெறுபவரின் கணினியைச் சீர்குலைக்கும் எண்ணத்துடன் அனுப்பப்படும் ஒரு மின்னஞ்சல் செய்தி. கடிதத்துடன் மறைந்துவரும் சில கட்டளைக் குறியீடுகள் பெறுபவரின் கணினியிலுள்ள கோப்புகளை முடக்கிவிடலாம். சில வேளைகளில் நச்சுநிரல் (virus) மடலில் மறைந்திருக்கலாம். பெறுபவரின் கணினியில் மறைந்திருந்து தாக்கும் ட்ரோஜான் குதிரை நச்சு நிரலாக இருக்கலாம். சில வேளைகளில் மடலின் செய்தியே மிகப்பெரிதாக இருந்து அஞ்சல் பெட்டியை நிரம்பி வழியச் செய்யலாம்.

letter quality : அச்சுத் தரம்;அச்சு நேர்த்தி, எழுத்துத் தரம் அச்சிடப்பட்ட படி (பிரதி) ஒன்றின் உயர்தரம் தொடர்பானது. சிறந்த தட்டச்சுப் பொறி ஒன்றில் பெறப்பட்டதுடன் ஒப்பிடக் கூடியது.

letter quality mode : எழுத்துத் தர முறை.

letter quality printer : எழுத்துத் தரமுள்ள அச்சுப்பொறி ;எழுத்துத் தர அச்சடிப்பி : சாதாரணதாளில் தெளிவான பிசிறற்ற எழுத்துகளை உருவாக்கும் அச்சுப் பொறி. பொதுவான அச்சுப் பொறி ஒன்று டெய்சி வடிவுள்ள சக்கரம் ஒன்றைப் பயன்படுத்து கிறது. அதில் எழுத்துகள் வளையக்கூடிய தண்டுகளின் முனையில் உள்ளன. சக்கரம் உயர்வேகத்தில் சுழலும்பொழுது அச்சிடு முனை பக்கத்தின்மீது நகர்கிறது. சுத்தி ஒன்று பொருத்தமான எழுத்துகளின் மீது அடிக்கிறது. அதன் மூலம் சிறந்த தட்டச்சுப்பொறியில் கிடைப்பதை விட தனித்தனியான நேர்த்தியான எழுத்துகளைக் கொண்ட உரை கிடைக்கிறது. இந்த வகை அச்சடிப்பிகளில் சில டெய்சி சக்கர முறைக்குப் பதிலாக கோல்ப் பந்து அச்சிடும் பொறியமைப்பைப் பயன்படுத்துகின்றன.

letter shift : எழுத்து உயர்த்தி : விசைப்பலகை விசை அல்லது விசையினால் உருவாக்கப்படும் குறியீடு. இது அடுத்து வரும்