பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

archival store

88

archive site


archival store : காப்பகச் சேமிப்பு : ஆவண இருப்பகம் : அடிக்கடி பயன்படுத்தாமல் பின் தேவைக்கு ஆதாரமாக வைக்கப் பட்டிருக்கும் கோப்புகள்.

archive : ஆவணக் காப்பகம் : கோப்புச் சேமிப்பகம் : 1. வேறொரு சேமிப்பகத்திலுள்ள கோப்புகளை நகலெடுத்துப் பாதுக்காப்பாக வைத்துக் கொள்கிற நாடா அல்லது வட்டுச் சேமிப்பகங்களைக் குறிக்கிறது. 2. இறுக்கிச் சுருக்கப்பட்ட கோப்பு. 3. இணையத்தில் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை (FTP) மூலமாக அணுக முடிகிற ஒரு கோப்பகம் (Directory) அல்லது அணுகுவோருக்கு வழங்குவதற்கென்றே இணையத்தில் கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள ஒரு கோப்பகம்.

archive attribute : காப்புக்கூறு : கோப்புகளை வகைப்படுத்தும் இயல்புநிலை. சில படிகள் மற்றும் பின்னாதரவு நிரல்களில் இந்த நிலையைச் சோதிக்க முடியும்.

archive bit : ஆவணக் காப்பகக் குறி : ஒரு கோப்பு ஆவணக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள உதவும் ஒரு குறியீடு.

archieve file : காப்பகக் கோப்பு : பல்வேறு கோப்புகளை உள்ளடக்கிய ஒரு கோப்பு. ஒரு மென்பொருள் தொகுப்பு, அதன் விளக்கக் குறிப்புகளையும் எடுத்துக்காட்டு உள்ளீட்டுக் கோப்புகளையும் உள்ளடக்கிய ஒரே கோப்பாக இருக்க முடியும், இணையத்தில் செய்திக்குழுவில் (news group) தொகுக்கப்பட்ட செய்திகளையும் இச்சொல் தொடர் குறிக்கிறது. யூனிக்ஸ் முறைமையில் tar கட்டளை மூலம் காப்பகக் கோப்புகளைக் கையாள முடியும் அவற்றை இறுக்கிச் சுருக்கவும் முடியும். டாஸ் மற்றும் விண்டோஸ் இயக்கத்தளத்தில் pkzip, மேக் ஓ. எஸ் இல் stuffit ஆகியவை ஏற்கெனவே இறுக்கிச் சுருக்கப்பட்ட கோப்புகளைக் கொண்ட காப்பகக் கோப்புகளை உருவாக்கப் பயன்படுகின்றன.

archive gateway : காப்பக நுழைவாயில்.

archive site : ஆவணக் காப்பகத் தளம் : கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள ஓர் இணைய தளம். இங்குள்ள கோப்புகளை பொதுவாக கீழ்க் காணும் ஏதேனும் ஒரு முறையில் அணுக முடியும். (1) பெயரின்றி அணுகும் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.