பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/896

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

mailing list programme

895

main control module


பரவலாகப் பயன்பாட்டில் உள்ள அஞ்சல் பட்டியல் மேலாளர்கள் ஆகும்.

mailing list programme : அஞ்சல் முகவரி நிரல் தொகுப்பு : பெயர்கள் மற்றும் முகவரிகளையும் பிற தொடர்புடைய தரவுகளைப் பராமரிக்கிற நிரல் தொகுப்பு. இது அஞ்சல் மேலொட்டுச் சீட்டுகளைத் தயாரிக்கிறது.

mail merging : அஞ்சல் இணைப்பு : அஞ்சல் பட்டியல் கோப்பில் உள்ள பெயர் மற்றும் முகவரிகளை குறிப்பிட்ட வடிவக் கடிதங்களில் தானாக அச்சிடும் நடைமுறை. அஞ்சல் இணைப்பு நிரல் தொகுப்பு ஒரு கோப்பில் உள்ள முகவரித் தரவுகளை மற்றொரு கோப்பில் உள்ள உரைத் தரவுகளுடன் இணைக்கிறது.

mail recipient : அஞ்சல் பெறுநர்.

mail reflector : அஞ்சல் பிரதிபலிப்பு : ஒரு அஞ்சல் பட்டியலுக்கு அனுப்பப்பட்ட செய்திகளை செய்திக்குழு வடிவத்துக்கு மாற்றியமைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு செய்திக்குழு.

mail server : அஞ்சல் வழங்கன்.

mailto : மெயில்டூ : ஒரு ஹெச்டீஎம்எல் கோப்பில் மின்னஞ்சல் அனுப்புவதைக் குறிப்பிடும் (Hyperlink) HREF என்னும் குறி சொல்லால் (Tag) இது குறிப்பிடப்படும். எடுத்துக்காட்டாக, குமரேசன் என்பவரின் மின்னஞ்சல் முகவரி kumar@yahoo. com என்று வைத்துக்கொள்வோம். ஹெச்டி எம்எல் ஆவணத்தில்,

<A HREF = "maito : kumar@yahoo. com"> E-mail : Kumaresan </A>

பயனாளர் E-mail : Kumaresan என்ற மீத்தொடுப்பின் மீது சுட்டியால் சொடுக்கினால் போதும். பயனாளரின் கணினியிலுள்ள மின்னஞ்சல் மென்பொருள் இயங்கத் தொடங்கும். அதில் To என்ற இடத்தில் kumar@yahoo. com இடம் பெற்றிருக்கும்.

main body : மையப் பகுதி ; முதன்மைப் பகுதி : ஒரு கணினி நிரலில் துணை நிரல்களை இயக்கும் கட்டளைகளும் பிற இன்றியமையாக் கட்டளைகளும் அடங்கிய நிரலின் முதன்மைப் பகுதி.

main control module : முதன்மைக் கட்டுப்பாடு மாடுல் : நிரல் தொடர் கூறு (மாடுல்) களின் வரிசைக் கிரமத்தில் மிக உயர்ந்த நிலை அதற்குக் கீழே