பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/939

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

MIDI

938

milicent technology


 MIDI : மிடி ; எம்ஐடிஐ : இசைக் கருவி இலக்கமுறை இடைமுகம் என்று பொருள்படும் Musical Instrument Digital interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இசை ஒருங்கிணைப்பிகள், இசைக் கருவிகள் இவற்றை கணினிகளுடன் இணைக்கும் ஒரு நேரியல் (serial) இடைமுக தர வரையறை. மிடி வரையறை பாதி வன்பொருள் அடிப்படையிலானது. பாதி, இசையும் ஒலியும் எந்த முறையில் குறியாக்கப்பட்டு மிடிச் சாதனங்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன என்ற விளக்கத்தை கொண்டிருக்கும். இது, ஒலியின் தொனி மற்றும் ஒலி அளவு போன்ற பண்புக்கூறுகள் 8 துண்மி (bit) இலக்கமுறைத் (digital) தகவலாய் மாற்றப்பட்ட குறி முறையாகும்.

midicomputer : நடு கணினி : சிறு கணினிக்கும், பெருமுகக் கணினிக்கும் இடைப்பட்ட செயல்திறன் உள்ள கணினி.

midiminicomputer : நடு நுண்ணிய கணினி : நடுத்தர வடிவளவுடைய நுண்ணியக் கணினி. இது 16 துணுக்குச் சொற்களைப் பயன்படுத்துகிறது. இது நுண் நுண்ணியக் கணினி, பெரும நுண்ணியக் கணினி, மீநுண்ணிய கணினி ஆகியவற்றிலிருந்து மாறுபட்டது.

midrange computer : நடு வரிசை கணினி : சிறு கணினி போன்றதே. ஆனால் தனி பயனாளர் சிறு கணினி பணி நிலையங்கள் இதில் இருப்பதில்லை.

migration : இடம்பெயர்வு.

. mil : . மில்; எம்ஐஎல் : அமெரிக்க நாட்டு இராணுவ அமைப்புகளின் இணைய தள முகவரிகளை அடையாளம் காட்டும் களப் பெயர். . mil என்பது தளமுகவரியின் இறுதியில் இடம்பெறும்.

milestone : நிகழ்வு ; மைல்கல்  : ஒரு பணியை நிறைவேற்றுங்கால் நிகழும் ஒரு நிகழ்வு. ஓர் உட்பாட்டு/ வெளிப்பாட்டுச் செயற்பாடு முடிவடைவது இதற்கு எடுத்துக்காட்டு.

millicent technology : மில்லிசென்ட் தொழில்நுட்பம் : டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்கிய இணைய நெறிமுறைத் தொகுதி. மிகச் சிறிய அளவிலான வணிகப் பரிமாற்றங்களைப் பற்றியது. ஒருசென்டுக்கும் குறைவான விலையில் தகவல் குறிப்புகளை வாங்குவது தொடர்பான வணிக நடவடிக்கைகளைக் கையாள்வதற்கான நெறிமுறை.