பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/940

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

milk disk

939

МІМЕ


 milk disk : பால் வட்டு : ஒரு சிறிய கணினியிலிருந்து தரவுகளைத் திரட்டப் பயன்படுத்தப்படும் வட்டு. பின்னர், ஒரு பெரிய கணினியில் செயலாக்கம் செய்யப்படுவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது.

mill : ஆலை : பகுப்பாய்வு எந்திரம் என அழைக்கப்பட்ட முதல் எந்திரக் கணினியை வடிவமைக்கும்போது சார்லஸ் பாபேஜ் பயன்படுத்திய செயலகத்திற்கு மற்றொரு பெயர்.

milli : மில்லி : ஆயிரத்தில் ஒரு பகுதி. ஒரு மில்லி வினாடி என்பது, ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பகுதியாகும்.

milli micro second : மில்லி நுண் வினாடி : இது நானோவினாடி (nanosecond) என்றும் அழைக்கப்படும். இது ஒரு வினாடியில் நூறு கோடியில் ஒரு பகுதி.

millisecond : மில்லி வினாடி : ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பகுதி; இதன் சுருக்க வடிவம் : ms அல்லது msec.

MILNET : மில்நெட் : இராணுவப் பிணையம் என்று பொருள்படும் Military Network என்ற தொடரின் சுருக்கம். தொடக்க கால ஆர்ப்பா நெட்டின் இராணுவப் பிரிவை உருவகிக்கும் விரிபரப்புப் பிணையம். அமெரிக்க நாட்டு இராணுவத் தரவு போக்குவரத்துக்கானது.

MIMD : எம்ஐஎம்டி : பல் ஆணை பல் தரவு தாரைச் செயலாக்கம் எனப் பொருள்படும் (Multiple Instruction Multiple Data Stream Processing) என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இணைநிலைச் செயலாக்கத்தை நடைமுறைப்படுத்தும் ஒருவகை கணினிக் கட்டுமானம். இக்கணினி அமைப்பிலுள்ள ஒவ்வொரு மையச் செயலகமும் தனித்தனியே நிரல்களைக் கொணர்ந்து தரவுகளின்மீது செயல்படுத்தும்.

MIME : மைம் : பல்பயன் இணைய அஞ்சல் நீட்டிப்புகள் எனப் பொருள்படும் Multiple Internet Mail Extensions என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஆஸ்கி வடிவத்தில் மாற்றி அமைக்காமலேயே ஒலி, ஒளிக்காட்சி மற்றும் இரும (பைனரி) கோப்புகளை இணைய மின்னஞ்சல் வழியாக அனுப்ப வகை செய்யும் தர வரையறை. இது எஸ்எம்டீபீ (SMTP-Simple Mail Transfer Protocol) யின் நீட்டிப்பாகும். ஓர் ஆவணத்தின் உள்ளடக்கத்தை மைம் வகை சுட்டுகிறது. மைம் ஒத்தியல்புள்ள பயன்பாடு ஒரு