பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/951

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

modify structure

950

modular design


நிரலை நிரந்தரமாக மாற்றி விடலாம், அல்லது அதில் மாற்றம் எதுவும் செய்யாமல் நடப்பு நிறை வேற்றத்தை மட்டுமே பாதிக்கலாம். 2. ஒரு குறிப்பிட்ட தேவைப்பாட்டுக் கேற்ப ஒரு செயல்முறையை மாற்றுதல்.

modify structure : வடிவமைப்பை மாற்று : ஒரு கோப்பின் வடிவ அமைப்பை மாற்றும் தரவுத் தளக் கட்டளை. புல நீளங்களும், பெயர்களும் மாற்றப்படலாம். புலங்களைச் சேர்க்கலாம் அல்லது நீக்கலாம். பழைய தரவுக் கோப்புகளை, புலங்கள் நீக்கப்பட்டாலொழிய புதிய அமைப்புகளாக தரவு இழப்பின்றி மாற்றித் தரும்.

modula-2 (Modular language-2) : மாடுலா-2 : பாஸ்கலை உருவாக்கிய சுவிட்சர்லாந்து பேராசிரியர் நிக்லாஸ்விர்த் 1979இல் அறி முகப்படுத்திய பாஸ்கலின் மேம்பட்ட பதிப்பு. கூறு (மாடுல்) களை தனியாகத் தொகுக்க உதவுகிறது.

modular : கூறுநிலை.

modular approach : கூறுநிலை அணுகுமுறை : ஒரு திட்டத்தை வரிசைக் கிரமமான பிரிவு களால் பிரித்தல். சிறிய அலகுகளாகப் பிரிப்பதனால் ஆய்வு, வடிவமைப்பு மற்றும் நிரல் தொடரமைப்பு முயற்சிகள் எளிமையாகும்.

modular coding : தகவமைவு குறியீட்டு முறை : செயல் முறைப்படுத்தும் உத்தி; இதில், ஒரு செயல்முறையில் தருக்க முறைப்பகுதிகள் பல்வேறு தனித்தனித் தகவமைவுகளாக அல்லது வாலாயங்களாகப் பகுக்கப்படுகின்றன; ஒவ்வொரு வாலாயமும் தனித்தனியே செயல்முறைப்படுத்தப்படும்.

modular constraint : தகவமைவு வரையறை : கணினி வரைகலையில், உருக்காட்சிகளின் சில அல்லது அனைத்துப் புள்ளிகளும், கண்ணுக்குப் புலனாகாத வலைச் சட்டத்தின் குறுக்கு வெட்டுப் புள்ளிகளில் அமைந் திருக்கும் வகையில், உருக் காட்சிகளின் இட அமைப்பில் ஏற்படுத்தப்படும் வரையறை.

modular design : கூறுநிலை வடிவமைப்பு : வன்பொருள் அல்லது மென்பொருள் வடிவமைப்பில் ஒர் அணுகுமுறை. இம்முறையில் ஒரு திட்டப் பணி சிறுசிறு கூறுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கூறும் தனியே உருவாக்கப் பட்டு, சோதிக்கப்பட்டு, இறுதியில் ஒருங்கிணைக்கப்பட்டு இறுதி வடிவம் பெறும். ஒவ்