பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ASCII

95

ASCII transfer


பயன்பாட்டுத் தொகுப்பில் இத்தகைய அகர வரிசையை முடிவு செய்வது மிகவும் சிக்கலானது. எடுத்துக்காட்டாக, எண்களை எழுத்துகளுக்கு முன்னால் வைப்பதா பின்னால் வைப்பதா, இடவெளிகளை (spaces) எங்கு சேர்ப்பது?. ஆங்கிலத்தைப் பொறுத்தவரை பெரிய எழுத்து, சிறிய எழுத்துச் சிக்கல் உண்டு. ஆஸ்க்கி அட்டவணையின் எண் மதிப்பு அடிப்படையில், ஆங்கிலச் சிறிய எழுத்து, பெரிய எழுத்தை விட அதிக மதிப்புக் கொண்டது.

ASCII : அஸ்கி : தகவல் பரிமாற்றத்துக்கான அமெரிக்கத் தரக் குறிமுறை எனப் பொருள்படும் American Standard Code for Information Interchange என்பதன் குறும்பெயர். ஏழு துண்மியுள்ள இந்தக் குறியீடு பல்வேறு வகையான சாதனங்களுக்கிடையே தரவுப் பரிமாற்றத்துக்கு உதவுகிறது.

ASCII character set : ஆஸ்கி எழுத்துத் தொகுதி : இரும இலக்கங்களில் ஏழு துண்மி (பிட்) குறிப்பிடப்படுகின்ற ஆஸ்கிக் குறியீடுகள், 0 முதல் 127 வரை அவற்றின் ஆஸ்க்கி மதிப்பு இருக்கும். பெரும்பாலான கணினிகளில் எட்டு துண்மி (பிட்) களால் ஆன விரிவாக்கப்பட்ட ஆஸ்கி குறியீடு பயன்படுத்தப்படுகிறது. அதில் கூடுதலாக 128 எழுத்துகளும் குறியீடுகளும் அடங்கியுள்ளன. பிறமொழி எழுத்துகள், வரைகலைக் குறியீடுகளைக் கொண்டுள்ளன.

ASCII file : ஆஸ்கிக் கோப்பு : ஆஸ்கி எழுத்து வடிவங்களில் உருவாக்கப்பட்ட ஆவணம், எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறிகள், இடவெளிகள், புதுவரிக் குறியீடுகள் இவற்றைக் கொண் டிருக்கும். சில வேளைகளில் தத்தல் (Tab) இட வெளிகள் மற்றும் கோப்பிறுதிக் குறியையும் கொண்டிருக்கும். ஆனால் வடிவமைப்பு (formatting) விவரங்கள் எதையும் கொண்டிருக்காது. இத்தகைய கோப்பு, உரைக் கோப்பு (text file) எனவும், உரை மட்டுமுள்ள கோப்பு (text only file) எனவும் அழைக்கப்படுகிறது.

ASCII transfer : ஆஸ்கி அனுப்புகை : ஆஸ்கிப் பரிமாற்றம் : மின்னணுத் தகவல் பரிமாற்றத்தில் ஓர் உரைக் கோப்பினை அனுப்புவதற்கு ஏற்ற படிவ முறை. இத்தகைய பரிமாற்ற முறையில் பிணையத்திற்கும், பிணையத்திலிருந்தும் தகவல் அனுப்பி வைக்க உலகப் பொதுவான குறியீட்டுத் தொகுதி