பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Artline

94

ascending order


செயல்படும் இந்தப் பிணையத் தின் தொழில்நுட்ப அடிப்படையில் ஒரு கணினிப் பிணையத்தை உருவாக்க ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மனித நரம்பு மண்டலப் பிணையக் கருத்தமைவின் அடிப்படையில் கணினியில் ஒரு குறிப்பிட்ட பணிக்கான மென்பொருளைச் செயல்படுத்தக்கூடிய செயற்கை நுண்ணறிவு அமைப்பினை நரம்பு சார்பிணையம் என்று அழைக்கலாம்.

Artline : ஆர்ட் லைன் : ஒரு வரைகலை மென்பொருள் : ஐபிஎம் சார்பு நுண்கணினிகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற விளக்கமுறை வரைகலை மென்பொருள். அளவெடுக்கக்கூடிய எழுத்துகள், முப்பரிமாணச் சாயல்கள், ஒரு உருவத்தை வேறொன்றாக மாற்றும் பணி போன்ற பல அம்சங்கள் இதில் உள்ளன.

artwork : வரைகலை வேலை : வரி ஓவியங்கள் போன்ற வரைகலை வேலைகளைச் செய்தல்.

ARTSPEAK : பேச்சுக்கலை : அனுபவமற்ற பயனாளர் கணினி வரைவுகளை வரை கருவியில் உருவாக்க உதவுவது.

ASA : ஏஎஸ்ஏ : அமெரிக்க புள்ளியியல் சங்கம் எனப் பொருள்படும் American Statistical Association என்பதன் குறும்பெயர்.

ASCC : ஏஎஸ்சிசி : தானியங்கு தொடர் செயல் கூட்டுறு கணிப்பான் எனப் பொருள்படும் Automatic Sequence Controlled Calculator என்பதன் குறும்பெயர். இது ஹார்வர்டு பல்கலைகழகத்தில் ஹோவர்டு அய்க்கன் ஆணைப்படி உருவாக்கப்பட்டது. 1941இல் நிறைவு செய்யப்பட்டது. காகித நாடா ஒன்றில் சேமிக்கப்பட்ட ஆணைகளைப் பயன்படுத்துவது. 'ஹார்வர்டு மார்க்' என்றும் அழைக்கப்பட்டது.

ascender : ஏற்றி : கீழ்வரிசை எழுத்துகளின் ஒரு பகுதி எழுத்தின் முக்கிய பகுதிக்கு மேலே நீளுதல்.

ascending : ஏறுமுகமாய் வரிசைப்படுத்தல் : பட்டியல் உறுப்புகளை ஏறுமுக வரிசையில் வரிசைப்படுத்தும் முறை.

ascending order : ஏறுமுக வரிசை : ஏறுவரிசை என்பது ஒரு பட்டியலிலுள்ள உறுப்புகளை சிறியதில் தொடங்கி பெரியதில் முடியுமாறு வரிசைப்படுத்துவது. எடுத்துக்காட்டாக 1 முதல் 10 வரை, அ முதல் ஒள வரை அடுக்குவது. ஒரு குறிப்பிட்ட