பக்கம்:கணினி களஞ்சியப் பேரகராதி-1.pdf/999

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

998


network news 998 network terminator

network news : பிணையச் செய்தி : இணையத்தில் இருக்கும் செய்திக் குழுக்கள். குறிப்பாக யூஸ்நெட் படிநிலையில் வந்த செய்திக் குழுக்களைக் குறிக்கும்.

network of networks : பிணையங்களின் பிணையம். இணையத்தைக் குறிக்கும்.

network operating system : பிணைய இயக்க அமைப்பு : ஒரு வளாகக் கோப்பு சேவையில் தங்கும் கட்டுப்பாட்டு நிரல் தொடர். ஒரு பிணையத்தில் உள்ள பணி நிலையங்களில் இருந்து தரவுக்காக வரும் வேண்டுதல்களை அது கையாள்கிறது.

network operation center : பிணையச் செயல்பாட்டு மையம் : ஒரு நிறுவனத்தில் பிணையப் பாதுகாப்புக்கு பொறுப்பான அலுவலகம். பிணையத்தின் செயல்திறனை மேம்படுத்தும் அதேவேளையில் பிணைய அமைப்பின் செயலிழப்பு நேரத்தைக் குறைக்கவும் முயலும்.

network protocol : பிணைய நெறிமுறை : ஒரு கணினிப் பிணையத்தில் தகவல் தொடர்பினை சாத்தியமாக்குவதற்கு வரையறுக்கப்பட்ட விதிகள் மற்றும் அளபுருக்களின்

தொகுதி.

network services : பிணையச் சேவைகள் : 1. ஒரு நிறுவனச் சூழலில் பிணையம் மற்றும் கணினிகளைப் பராமரிக்கும் பணிப்பிரிவு. 2. விண்டோஸ் பணிச்சூழலில், பிணைய அச்சிடல் மற்றும் கோப்புப் பகிர்வு போன்ற பிணையச் செயல்பாடுகளைச் சாத்தியமாக்கும் இயக்க முறைமையின் நீட்டிப்புகள்.

network software : பிணைய மென்பொருள் : ஒரு பிணையத்தில் வேறொரு கணினியை இணைத்துக் கொள்ள அல்லது பங்குபெற உதவும் மென்பொருள்.

network structure : பிணையக் கட்டமைப்பு : ஒரு குறிப்பிட்ட பிணைய மாதிரியத்தில் பயன்படுத்தப்படும் ஏடுகளின் ஒழுங்கமைவு.

network termination : பிணைய முடிப்பு.

network terminator : பிணைய முடிவுறுத்தி; பிணையச் சாதன இணைப்பி : ஒரு ஐஎஸ்டிஎன் சாதனம். ஐஎஸ்டிஎன் தொலைபேசி இணைப்புத் தடத்திற்கும், முனைய தகவிகளுக்கும் (Terminal Adapter) அல்லது