பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

commercial software

103

common lisp


பயன்படுத்தி வேண்டியவற்றைக் கேட்டுப் பெறலாம். நெட்ஸ்கேப், மைக்ரோசாஃப்ட். குவார்ட்டர் டெக்ட் போன்றவை உள்ளடங்கலாக அநேக கம்பெனிகள் வணிக வழங் கன்களை விற்பனை செய்கின்றன.

commercial software : வணிக மென்பொருள்.

common access method : பொது அணுகு வழிமுறை : ஃபியூச்சர் டொமைன் நிறுவனம் மற்றும் ஏனைய ஸ்கஸ்ஸி வணிக நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய தர வரை யறை. எப்படிப்பட்ட வன்பொருள் களைப் பயன்படுத்தினாலும் ஸ்கஸ்ஸி தகவிகள் (adapters) ஸ்கஸ்ஸி சாதனங்களுடன் தகவல் பரிமாற்றத் தைச் சாத்தியம் ஆக்குகின்ற பொது அணுகு வழிமுறை இதுவாகும்.

common applications environment (CAE) : பொதுப் பயன்பாட்டுச் சூழல்.

common business oriented language: பொது வணிகம் சார்ந்த மொழி. கோபால் (COBOL) மொழியின் விரி வாக்கப் பெயர்.

common control : பொதுக் கட்டுப்பாடு

common client interface : பொதுக் கிளையன் இடைமுகம் : என்சிஎஸ்ஏ நிறுவனத் தயாரிப்பான மொசைக் மென்பொருளின் எக்ஸ் - விண் டோஸ் பதிப்பில் அறிமுகப்படுத்தப் பட்ட ஒரு கட்டுப்பாட்டு இடை முகம். ஒரு வலை உலாவியின் உள்ளக நகலை வேறு நிரல்கள் கட்டுப்படுத்த முடியும். என்சிஎஸ்ஏ மொசைக்கின் எக்ஸ் - விண்டோஸ் மற்றும் விண்டோஸ் பதிப்புகள் டிசிபி/ஐபீ நெறிமுறை மூலமாக பிற நிரல்களுடன் தகவல் பரிமாறிக் கொள்கின்றன, விண்டோஸ் பதிப் பில் ஓஎல்இ தகவல் பரிமாற்றமும் இயல்வதாகும்.

Common Dialog Box Control : பொதுக் உரையாடல் பெட்டி இயக்குவிசை

common hardware reference platform : பொது வன்பொருள் குறிப்புப் பணித் தளம் : பவர்பீசி செயலியின் அடிப்படையில் அமைந்த ஒரு கணினிக் குடும்பத்துக் கான வரையறுப்பு. மேக்ஓஎஸ், விண்டோஸ் என்டி, ஏஐஎக்ஸ் மற்றும் சோலாரிஸ் உட்பட பல்வேறு இயக்க முறைமைகளில் இக்கணினிகள் செயல்பட முடியும்.

common imernet file system : பொது இணையக் கோப்பு முறைமை ; சன் மைக்ரோசிஸ்டம்ஸ் நிறுவனத்தின் வெப் நெட்வொர்க் என்னும் கோப்பு முறைமைக்குப் போட்டியாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன் வைத்த தர வரையறை. இணையம் மற்றும் அக இணையக் கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு கோப்பு முறைமை ஆகும். ,

common language runtime(CLR) : பொதுமொழி இயக்கச் சூழல். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நெட் (.NET) தொழில்நுட்பத்தின் ஓர் அங்கம். பல்வேறு மொழியில் எழுதப்பட்ட நிரல்களை ஒரே இயக் க சூழலில் செயல்படுத்த முடியும்.

common language specification (CLS) : பொதுமொழி வரையறை: பொது மொழி வரையறுப்பு. மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் . நெட் (.NET) தொழில் நுட்பத்தின் ஓர் அங்கம்.

common lisp : பொது லிஸ்ப் : லிஸ்ப் நிரலாக்க மொழியின் தரப்படுத்தப் பட்ட பதிப்பு. லிஸ்ப் மொழியை எந்த நிறுவனமும் தம் சொந்த