பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

common storage area

104

communication satellite


வடிவில் வெளியிட முடியும். இதன் காரணமாய் லிஸ்ப் மொழி வெவ் வேறு வடிவில் வெளியிடப்பட்டது. எனவே அம்மொழியைத் தரப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது. தரப்படுத்தப்பட்ட பொது லிஸ்ப் மொழி உருவாக்கப்பட்டது. இதன் மூலம் லிஸ்ப் நிரலர்களுக்கு ஒரு வரையறுக்கப்பட்ட மூலமொழி கிடைத்தது.

common storage area : பொது சேமிப்பகப் பரப்பு.

common user access : பொதுப் பயனர் அணுக்கம் : ஐபிஎம் நிறு வனத்தின் முறைமைப் பயன் பாட்டுக் கட்டு மானத்தில் ஒரு பகுதி யாக, பயனாளர் இடைமுகங்களை மேலாண்மை செய்வதற்கான தர வரையறைகளின் தொகுதி. வெவ் வேறு பணித்தளங்களில் ஒத்தியல் பாகவும் முரணின்றியும் செயல்படக் கூடிய பயன்பாடுகளை உருவாக்க உதவுவதற்கென இந்தப் பொதுப் பயனாளர் அணுக்கம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

communication data : தகவல் தொடர்பு தரவு.

communication device : தகவல் தொடர்புச் சாதனம்.

communication intertace : தகவல் தொடர்பு இடைமுகம்.

communication line : தகவல் தொடர்பு இணைப்பு.

communication link : தகவல் தொடர் புத் தொடுப்பு : கணினிகளுக் கிடையே தகவல் பரிமாற்றத்துக்கு வழியமைத்துத் தரும் இணைப்பு.

communications parameters : தகவல் தொடர்பு அளபுருக்கள் : கணினிகள் தம்மிடையே தகவல் பரிமாறிக் கொள்ளத் தேவையான பல்வேறு தகவமைவுகளைக் குறிக்கும் அளபுருக்கள் ஒத்தியங்காத் தகவல் தொடர்புகளில், எடுத்துக்காட்டாக, இரு இணக்கி (மோடம்)களுக் கிடையே தகவல் தொடர்பு நடை பெற மோடத்தின் வேகம், தகவல் துண்மிகள், முடிப்புத் துண்மிகளின் எண்ணிக்கை, மற்றும் வகைச் சமன் ஆகிய அளபுருக்களை சரியாக தகவ மைக்க வேண்டும்.

communications slot : தகவல் தொடர்புச் செருகுவாய் : மெக்கின் டோஷ் கணினியின் பல்வேறு மாதிரிகளில் பிணைய இடைமுக அட்டைகளைச் செருகுவதற்கென் உள்ள விரிவாக்க செருகுவாய்.

communication satellite : தகவல் தொடர்பு செயற்கைக்கோள் : பூமியின் மேலே சுற்றுப்பாதையில் பூமியின் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள், நுண்ணலை பரப்பும் நிலையமாக அது செயல் படும். தரைநிலையத்திலிருந்து அனுப்பப்படும் சமிக்கைகளை ஏற்று, அவற்றின் திறன் பெருக்கி வெவ்வேறு அலைவரிசைகளில் பூமியிலுள்ள இன்னொரு தரை நிலையத்துக்கு அனுப்பி வைக்கும். தொடக்க காலங்களில் தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி சேவை களுக்காகவே இத்தகைய தகவல் தொடர்பு செயற்கைக் கோள்கள் பயன்படுத்தப்பட்டன. கணினி தகவல்களின் அதிவேக பரப்புகைக் கும் பயன்படுத்த முடியும். ஆனால் இரண்டு இடையூறுகள் உள்ளன. ஒன்று, அலைபரவலில் ஏற்படும் தாமதம் (சமிக்கைகள் நீண்ட தொலைவு பயணம் செய்வதற்கு