பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

computer press association

111

computer telephone integration



கணினிக்கிருக்கும் திறன். பல வகையிலும் கணினியின் திறன் மதிப்பிடப்படுகிறது. ஒரு வினாடிக்கு எத்தனை மில்லியன் ஆணைகளை நிறைவேற்றும் என்று அதன் வேகம் மதிப்பிடப்படுவதுண்டு (MIPS - Million Instruction Per Second) அல்லது வினாடிக்கு எத்தனை மிதவைப் பள்ளிக் கணக்கீடுகளைச் செய்யவல்லது என்ற முறையில் அளப்பதுமுண்டு (MFLOPS - Million Floating Point Operations Per Second) கணினியின் திறனை வேறு வகையிலும் மதிப்பிடலாம். மதிப்பிடுபவரின் தேவைகளையும் நோக்கங்களையும் பொறுத்தது.

computer press association : கணினிப் பத்திரிகையாளர் சங்கம் : கணினித் தொழில்நுட்பம் பற்றியும் கணினித் தொழில்துறை பற்றியும் எழுதுகின்ற பத்திரிகைகளில், வலைபரப்பாளர்கள் மற்றும் படைப்பாளிகள் இவர்கள் சேர்ந்த ஒரு வணிக அமைப்பு.

computer process : கணினிச் செயலாக்கம்; கணினி செயற்பாங்கு: கணினி நடைமுறை.

computer readable : கணினி படித்தகு : கணினி படித்துப் பொருள் கொண்டு நிறைவேற்றும் வடிவில் அமைந்த ஆணை. இருவகையான தகவல் கணினி படித்தகு என்று சொல்லப்படுகிறது. பட்டைக் கோடுகள், காந்த நாடா, காந்த கையெழுத்துகள் மற்றும் வருடிப் பார்த்து அறிந்து கொள்ளும் ஏனைய வடிவங்கள் - இவையனைத்தும் கணினி படித்தகு தகவலாகும். கணினியின் நுண்செயலிக்குப் புரியும் வகையில் எந்திர மொழியில் இருக்கும் தகவல்.

computer revolution : கணினிப்புரட்சி : தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டு வரும் அதிவேக வளர்ச்சி காரணமாக சமூக, தொழில் நுட்பத் துறைகளில் கணினியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தனியாள் பயன்படுத்தும் சொந்தக் கணினிகளின் பயன்பாடு மிகவும் அதிகரித்துள்ளது. சமூக வாழ்வில் இவற்றின் தாக்கம் புரட்சிகரமானது என்றுதான் கூறவேண்டும். கணினியின் வேகம், துல்லியம், சேமிப்புத் திறன் ஆகியவை தகவல் சேமிப்பு, செயலாக்கம் மற்றும் பரிமாற்றத்தில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.

computer systems, audit of :கணினிமுறைமைத் தணிக்கை.

computer terminal, remote : சேய்மை கணினி முனையம்; தொலை கணினி முனையம்.

computerisation : கணினி மயமாக்கல்.

computerise : கணினிமயமாக்கு.

computer, scientific : அறிவியல் கணினி.

computer, special purpose : சிறப்புப்பயன் கணினி.

computer telephone integration : கணினி-தொலைபேசி ஒருங்கிணைப்பு : தொலைபேசியில் வரும் அழைப்புகளை முறைப்படுத்துதல், மாற்று எண்ணுக்கு திசைதிருப்புதல், தானாகப் பதில் தருதல், ஒரு தகவல் தளத்தில் உள்ள தகவலைத் தேடி அறிவித்தல், தானாகவே இன்னொரு தொலைபேசி எண்ணை அழைத்து தகவலைத் தெரிவித்தல் போன்ற