பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

con

112

conditional compilation



அனைத்துப் பணிகளையும் ஆட்களின் தலையீடு எதுவுமின்றி செய்து முடிக்கக் கணினியையும் கணினி மென்பொருள்களையும் பயன்படுத்தும் தொழில்நுட்பம்.

con : கான் (கன்சோல்) : எம் எஸ் டாஸ் இயக்க முறைமையில் விசைப் பலகை மற்றும் கணினித் திரையைக் குறிக்கும் கருத்தியலான சாதனப் பெயர். உள்ளீடு மட்டும் செய்யமுடிகிற விசைப்பலகை மற்றும் வெளியீடு மட்டும் செய்ய முடிகிற காட்சித் திரை இரண்டும் சேர்ந்து முறையே முதன்மையான உள்ளீட்டு/வெளியீட்டு ஊடகமாய் எம் எஸ்-டாஸ் இயக்கமுறைமையில் பயன்படுகின்றன.

concatenation : ஒன்றிணைப்பு: இணைத்தல்; பிணைத்தல்.

concept : கருத்துரு; மனவுரு; கருத்தமைவு.

concept. database : தரவுத் தளக் கோட்பாடு; தரவுத் தள எண்ணக் கருத்துரு .

conceptual scheme ; கருத்துருத் திட்டவரை : தரவுத் தளங்கள் பல, மூன்று நிலைத் திட்டவரைக் கட்டுமானத்தை ஏற்பவையாய் உள்ளன. தரவுத்தளத்தின் கட்டமைப்பு மற்றும் தகவல் உள்ளடக்கம் இரண்டும் சேர்ந்தே திட்டவரைக் கட்டுமானத்தை நிர்ணயம் செய்கின்றன. மூன்று திட்டவரைகளுள் கருத்துருத் திட்டவரை (தருக்க முறைத் திட்ட வரை) தகவல் தள முழுமையின் மாதிரியை விளக்குவதாய் உள்ளது. எனவே இது அக மற்றும் புற (Internal and External) திட்டவரைகளுக்கு இடைப்பட்டதாய் விளங்குகிறது. அகத் திட்டவரை, தகவல் சேமிப்பையும், புறத்திட்டவரை பயனாளருக்குத் தகவலை வெளிப்படுத்தும் பணியையும் செய்கின்றன. பொதுவாக திட்டவரை என்பது தரவுத் தளம் வழங்கும் தரவு வரையறை மொழி (Data Definition Language - DLL)யின் கட்டளைகளால் வரையறுக்கப்படுகின்றது.

concurrent execution : உடன்நிகழ் நிறைவேற்றம் : இரண்டு அல்லது மேற்பட்ட நிரல்கூறுகளை அல்லது நிரல்களை, ஒரே நேரத்தில் இயங்குவதுபோல் தோற்றமளிக்குமாறு செயல்படுத்துதல். ஒரு நிரலைப் பல்வேறு பணிக்கூறுகளாக அல்லது பல்வேறு புரிகளாக (threads) பிரித்து நேரப் பங்கீட்டு முறையில் ஒற்றைச் செயலியில் நிறைவேற்றிக் கொள்ள முடியும். அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் மூலமும் உடன் நிகழ் நிரல்களை நிறைவேற்ற முடியும்.

conditional : நிபந்தனைக்குட்பட்டது: ஒரு நிபந்தனை மெய்யாக இருக்கும்போது அல்லது மெய்யாக இல்லாதபோது ஒரு நடவடிக்கையை அல்லது ஒரு செயல்பாட்டை மேற்கொள்ளுமாறு ஒரு நிரலில் அமைக்கப்படும் கட்டளை தொடர்பானது.

conditional compilation : நிபந்தனை மொழிமாற்றம் : ஒரு நிரலின் மூல வரைவினை சில நிபந்தனைகளின் அடிப்படையில் பொறிமொழியாய் மொழிபெயர்க்கும் முறை. எடுத் துக்காட்டாக நிரலை மொழிமாற்றம் செய்யும் நேரத்தில் {DEBUG) குறியீடு வரையறுக்கப்பட்டிருந்தால் மட்டுமே நிரலர் குறிப்பிட்ட பகுதிகள் மொழி மாற்றப்படவேண்டும் என்று கட்டளை அமைக்க முடியும்.