பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Declaractive Markup Language

133

default home page


Declaractive Markup Language (DML) அறிவிப்புக் குறியமை மொழி: உரைக் கோப்புகளில் உரையை வடிவமைப்பதற்கான கட்டளைகளைக் குறிப்பது. ஆவணத்தில் இன்னின்ன பகுதிகள் வடிவமைப்புக்கு உள்ளாகியுள்ளன என்பதை மட்டுமே இது குறிக்கும். கூறாக்கி (Parser) என்னும் இன்னொரு நிரல், உண்மையான ஆவண வடிவமைப்பைச் செய்து முடிக்கும். எஸ்ஜி எம்எல் (SGML), ஹெச்டிஎம்எல் (HTML) போன்றவை அறிவிப்புக் குறியமை மொழிக்கான எடுத்துக் காட்டுகளாகும்.

declare : அறிவி, அறிவிப்பு செய்; அறிவிக்க : சில உயர்நிலை மொழிகளில் மாறிகளை (Wariables) அறிவிக்கும் கட்டளையாகப் பயன்படுகிறது. நிரலில் பயன்படுத்தவிருக்கும் மாறிகளின் பெயர், விவர இனம் ஆகியவற்றை அறிவிக்க வேண்டும். பெரும்பாலான உயர்நிலை மொழி நிரல்களில் மாறிகளின் அறிவிப்பு தொடக்கத்திலேயே செய்யப்படுகின்றது.

.de.co.us : .டி.இ.சி.ஒ.யுஎஸ் : அமெரிக்காவிலுள்ள, கொலராடோ மாநிலத்தில் டென்வர் நகரைச் சேர்ந்த இணைய தளங்களைக் குறிக்கும் பெருங்களப் பெயர்.

decoding : குறிவிளக்கம்.

decrease indent : ஓரச் சீர்மை குறை.

decrease speed : வேகம் குறை.

decrease volume : ஒலியளவு குறை.

decrypt : மறைவிலக்கு.

DEC station : டெக் ஸ்டேஷன் : 1. சொல் செயலாக்கத்திற்கெனத் தனியாக டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் 1978இல் உருவாக்கிய சிறிய கணினி. 2. 1989இல் டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் உருவாக்கிய சொந்தக் கணினி வரிசைக்கும் இதே பெயர். 3.1989இல் டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் உருவாக்கிய, ரிஸ்க் (RISC) பிராசசரில் செயல்படும் ஒற்றைப் பயனாளர் யூனிக்ஸ் பணிநிலையங்களுக்கும் இப்பெயர் வழங்கப்பட்டது.

dedication : ஒப்படைப்பு.

deduction : பிடிப்புத் தொகை.

deep copy : ஆழ் நகல் : ஒரு தரவுக் கட்டமைப்பு (data structure) உள்ளடக்கத்தையும் அதன் துணை நிரல்கூறுகளையும் சேர்த்து நகல் எடுத்தல்.

deep hack : ஆழ் முனைவு : ஒரு நிரலாக்கப் பணி முயற்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு மூழ்கிவிடும் நிலை.

default button : முன்னிருப்புப் பொத்தான்; முன்தேர்வுப் பொத்தான்; தானியல்புப் பொத்தான் : ஒர் இயக்க முறைமையிலோ அல்லது ஒரு பயன்பாட்டுத் தொகுப்பிலோ ஒரு சாளரம் திரையில் தோன்றும்போது, அதிலுள்ள இயக்குவிசைப் பொத்தான்களில் ஒன்று தேர்வு செய்யப்பட்ட நிலையில் இருக்கும். விசைப் பலகையிலுள்ள நுழைவு (Enter) விசையை அழுத்தும் போது, தேர்வு செய்யப்பட்ட நிலையிலிருக் கும் பொத்தான் அழுத்தப்பட்டு அதற்குரிய செயல்பாடு நிகழ்த்தப்படும்.

default editor: முன்னிருப்புத் தொகுப்பி.

default home page : முன்னிருப்பு முகப்புப் பக்கம்; தானியல்பு முகப்புப்