பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

default operator

134

delete key


பக்கம் : இணைய உலாவின்போது, கோப்புப் பெயர் எதையும் குறிப்பிடாமல் ஒரு வலைத்தளத்தின் கோப்பகத்தை மட்டும் குறிப்பிட்டு அணுகும்போது, குறிப்பிட்ட பெயருள்ள கோப்பினை வழங்குமாறு, வலை வழங்கன் கணினியில் நிரல் அமைக்கப்பட்டிருக்கும். அந்தக் கோப்பின் பெயர் பெரும்பாலும், index.htm, index.html, main.html என்பதாக இருக்கும்.

default operator : முன்னிருப்பு செயற்குறி, கொடாநிலை செயற்குறி.

defect : குறைபாடு.

definite iteration : முடிவுறு மடக்கச் செயல்; குறித்த எண்ணிக்கையில் திரும்பச் செய்தல்.

default printer : முன்னிருப்பு அச்சுப் பொறி; முன்தேர்வு அச்சுப்பொறி : ஒன்றுக்கு மேற்பட்ட அச்சுப்பொறிகள் நிறுவப்பட்டுள்ள ஒரு கணினியில், ஒரு குறிப்பிட்ட அச்சுப்பொறி முன்னிருப்பாகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இருக்கும். எந்த அச்சுப் பொறியில் அச்சிடுவது என்பதைக் குறிப்பிடாமலே, அச்சிடக் கட்டளை தரும்போது, முன்னிருப்பாகக் குறிக்கப்பட்ட அச்சுப்பொறியில் அச்சிடப்படும்.

Defense Advanced Research Projects Agency : பாதுகாப்பு உயர்நிலை ஆய்வுத் திட்டப்பணி முகமை : பல்வேறு கணினிப் பிணையங்களை இணைத்து ஒருங்கிணைத்த கட்டமைப்பை உருவாக்கும் ஆய்வுக்காக அமெரிக்க அரசு அமைத்த முகமை. ஆர்ப்பா (ARPA), டார்ப்பா (DARPA) என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. ஒருங்கிணைந்த பிணைய களின் கட்டமைப்பே இன்றைய இணையமாகப் பரிணமித்துள்ளது.

deferred processing : ஒத்தி வைக்கப்பட்ட செயலாக்கம்; தாமதித்த செயலாக்கம் : தகவல், தொகுதி தொகுதியாகப் பெறப்பட்டு சேமிக்கப்பட்டபின் மேற்கொள்ளப்படும் செயலாக்கம்.

defined function key, user: பயனாளர் வரையறுத்த பணிவிசை.

deformation : உருச்சிதைவு : பல்லூடக மற்றும் கணினிவழி வடிவாக்கப் பயன்பாடுகளில், உருவாக்கப்பட்ட வடிவ மாதிரிகளில், மென்பொருள் கருவிகளின் உதவியுடன், செய்யப் படும் நீட்சி, சுருக்கம், வளைத்தல், முறுக்குதல் போன்ற உருவ மாற்றங்கள்.

delete all : அனைத்தும் அழி; அனைத்தும் நீக்கு.

delete file : கோப்பை நீக்கு.

delete key : நீக்கல் விசை அழித்தல் விசை : 1. ஐபிஎம் மற்றும் ஒத்தியல்புக் கணினிகளில் பயன்படுத்தப்படும் ஒரு விசை. விசைப்பலகையில் Del என்று குறிக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான பயன்பாட்டுத் தொகுப்புகளில் இந்த விசையை அழுத்தியவுடன் சுட்டுக் குறியின் உ அடுத்துள்ள எழுத்து அழிக்கப்படும். ஆனாலும் வேறுசில பயன்பாடுகளில், தேர்வு செய்யப்பட்ட உரைப்பகுதி அல்லது வரைகலைப் படத்தை நீக்கிவிடும். 2. ஆப்பிள் மெக்கின்டோஷ் கணினிகளில் ஏடிபி மற்றும் விரிவாக்க விசைப் பலகைகளில் உள்ள விசை, செருகு குறிக்கு முந்தைய எழுத்தை அழிக்கும். அல்லது தேர்வு செய்யப்பட்ட