பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

document style semantics

153

domain name address


ஹெச்டிஎம்எல் மொழியில் உருவாக்கப்பட்ட உரைக்கோப்பினை ஒர் இணைய உலாவியில்(Browser)பார்வையிடும்போது அழகான வடிவமைப்புடன் தோற்றமளிக்கும்.ஹெச்டிஎம்எல் மூல உரைக்கோப்பு, ஆவணமூலம் எனப்படுகிறது.இணையத்தில்(வைய விரிவலையில்) பார்வையிடுகின்ற மீவுரை(Hyper Text)ஆவணங்களின் மூல வரைவினை (Source Code)அதாவது ஆவண மூலத்தைப் பார்வையிட உலாவியிலேயே வசதி உண்டு.

document style semantics and specification language:ஆவண பாணி தொடரிலக்கணம் மற்றும் வரையறுப்பு மொழி: உருவாகிக் கொண்டிருக்கும் ஐஎஸ்ஓ தர வரையறை.ஒரு குறிப்பிட்ட வடிவாக்கம் அல்லது செயலாக்கம் சாராத ஒர் ஆவணத்தின் உயர்தர வடிவாக்கம் தொடர்பான தொடரிலக்கணம் பற்றியது.தொடரிலக்கணத்துக்கான எஸ்ஜிஎம்எல் வரையறைக்குச் செழுமை சேர்ப்பதாய் அமையும்.

document window:ஆவணச் சாளரம்:மெக்கின்டோஷ்,விண்டோஸ் போன்ற வரைகலைப் பணித்தளத்தில் எந்தவொரு பயன்பாட்டுத் தொகுப்பும் ஒரு சாளரத்தினுள்ளேதான் காட்சியளிக்கும். அது போலவே அத்தொகுப்பில் ஒர் ஆவணத்தை உருவாக்குதலும் பார்வையிடுதலும் ஒரு தனிச்சாளரத் தினுள்ளேதான் நடைபெறும்.சில தொகுப்புகளில் இவையிரண்டும் இணைந்து ஒரே சாளரமாகத் தோற்றமளிப்பதும் உண்டு. வரைகலைப் பணித்தளத்தில் ஒர் ஆவணம் தோற்றமளிக்கும் சாளரம் ஆவணச் சாளரம் எனப்படுகிறது.

DO loop :செய் மடக்கி:பெரும்பாலான கணினி மொழிகளில்,ஒரு குறிப்பிட்ட பணியைத் திரும்பத் திரும்பப் பலமுறை செயல்படுத்த கட்டுப்பாட்டு மடக்கி(control loop)என்னும் கட்டளை வடிவம் பயன் படுத்தப்படுகின்றது.For...Next,While..Wend,Do...Enddo போன்ற பல்வேறு கட்டளை வடிவங்கள் உள்ளன. DO என்னும் மடக்கி,ஃபோர்ட்ரான்,விசுவல் பேசிக், சி, சி++,சி ஷார்ப் ஜாவா, மொழிகளில் உள்ளது.

domain name:களப் பெயர்;திணைப் பெயர்:ஒரு பிணையத்தில் ஒரு குறிப்பிட்ட வழங்கன் அல்லது புரவன் கணினியின் உரிமையாளரை அடையாளம் காட்டும் பெரும் படிமுறை அமைப்பில் அம்முகவரி அமையும்.எடுத்துக்காட்டாக,www.chennai telephones.gov.in என்ற முகவரி இந்தியாவிலுள்ள(in).அரசுக்குச் சொந்தமான(gov).சென்னைத் தொலைபேசி நிறுவனத்தின் வலை வழங்கன்(web server)என்பதைக் குறிக்கிறது. in என்பது புவியியல் பெரும் களம்(major geographical domain)எனவும், gov என்பது வகைப்படு பெருங்களம் எனவும்,chennai telephones என்பது உட்களம்(minor domain)எனவும் அறியப்படுகிறது.

கணிமொழி.வணி தமிழ்.வலை யாகூ.நிறு.இந்

என்பதுபோன்று தமிழ்மொழியிலேயே களப்பெயர்களை அமைத்துக் கொள்ளும் தொழில்நுட்பமும் வந்துவிட்டது.

domain name address:களப் பெயர் முகவரி:இணையத்திலோ அல்லது ஏதேனும் ஒரு டீசிபீ/ஐபீ பிணையத்திலோ இணைக்கப்பட்ட ஒரு