பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

DRDW

157

droplet


வகம்,வட்டம்,ஒர் உரைத்தொகுதி ஆகியவற்றை தனித்த பொருள்களாகக் கையாளலாம்.அவற்றைத் தேர்வு செய்து நகர்த்தலாம்.மாற்றலாம், வண்ணம் தீட்டலாம்.(எ-டு)விண்டோஸ் 95/98 இயக்க முறையில் உள்ளிணைக்கப்பட்டுள்ள பெயின்ட்(Paint).

DRDW:டிஆர்டிடபிள்யூ:எழுதும் போதே நேரடியாகப் படித்தல் என்னும் பொருள்படும் Direct Read During Write என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.ஒர் ஒளிவட்டில் எழுதும்போதே பதிவின் துல்லியத்தை சரிபார்க்க இத்தொழில்நுட்பம் பயன்படுகிறது.

drive change:இயக்கம் மாற்று.

drive converter:இயக்கக மாற்றி.

drive cartridge:பேழை இயக்கம்.

drive, disk:வட்டு இயக்கம்.

drive letter:இயக்க எழுத்து:ஐபிஎம் மற்றும் ஒத்திசைவுக் கணினி களில் இயக்ககங்களுக்கான பெயரைத் தேர்வு செய்யும் மரபுமுறை.இயக்க கங்களுக்கு A-யில் தொடங்கி பெயர்கள் சூட்டப்படுகின்றன.எழுத்துக்குப்பின் முக்காற்புள்ளி இடப்பட வேண்டும்.(எ-டு). A:, C:, D:.

drive mapping:இயக்கப் பெயரீடு:ஒரு கணினியிலுள்ள இயக்ககங்களுக்கு பெயர் சூட்டல்.ஒரெழுத்தாகவும் இருக்கலாம்.ஒரு பெயராகவும் இருக்கலாம்.இயக்க முறைமை அல்லது பிணைய வழங்கன் இந்தப் பெயரைக் கொண்டே அந்த வட்டகத்தை அடையாளம் காணும். எடுத்துக்காட்டாக,பீசிக்களில் எப்போதுமே நெகிழ்வட்டு இயக்ககங்கள் A, B என்றும், நிலை வட்டகம் C என்றும் பெயர் பெறுகின்றன.

drive number:இயக்க எண்.

driver:இயக்கி; செலுத்தி:கணினியில் ஒரு சாதனத்தை இயக்கும் அல்லது கட்டுப்படுத்தும் அல்லது முறைப்படுத்தும் இன்னொரு வன்பொருள் சாதனம் அல்லது மென்பொருள் நிரல்.எடுத்துக்காட்டாக,ஒரு தடஇயக்கி,தொலை;தொடர்புத்தடத்தில் அனுப்பப்படும் சமிக்கைகளை திறன்மிகுத்துத் தரும்.விசைப்பலகையிலுள்ள விசைகள் இன்ன விதமாக இயங்க வேண்டும் என்பதை அதற்குரிய இயக்கி நிரலே தீர்மானிக்கிறது. அதனை விசைப்பலகை இயக்கி(keyboard driver)என்று அழைக்கிறோம். இதுபோல அச்சுப்பொறியை வழிநடத்த இயக்கி உள்ளது.கணினி,அதனுடன் இணைக்கப்பட்ட புறச்சாதனங்களோடு ஒத்திசைவுடன் செயல்பட உதவும் இயக்கிகள் சாதன இயக்கிகள்(Device Drivers)எனப்படுகின்றன.

driver manager:இயக்கி மேலாளர்.

droplet:டிராப்லெட்: 1.குவார்க் எக்ஸ்பிரஸ் தொகுப்பில் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள ஒரு வசதி.ஃபைண்டரிலிருந்து கோப்புகளை இழுத்து வந்து ஆவணத்தின் ஒரு பக்கத்தில் இணைத்துவிட முடியும். 2.ஃபிரன்டியர் (Frontier)தொகுப்பில் உள்ள வசதி.ஒரு பயன்பாட்டினுள்ளே கட்டளை வரிகளை உள்ளிணைத்து,அப்பயன்பாட்டினை இரட்டைக் கிளிக் செய்யும்போது,கட்டளைவரிகள் இயங்குமாறு செய்ய முடியும். 3.ஒருகோப்பினை இழுத்துவந்து போடுவதற்கு அனுமதிக்கிற எந்தவொரு ஆப்பிள் ஸ்கிரிப்ட் நிரலும் இப்பெயராலேயே அழைக்கப்படுகிறது.