பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

E

162

editing keys




E


earth : தரையிணைப்பு.


E-commerce : மின் வணிகம். கணனி பிணையங்கள் வழியாக வணிக நடவடிக்கைகளைப் பொதுவாகக் குறிக்கிறது. தற்போது இணையம் வழி நடைபெறும் வணிகத்தையும் இவ்வாறே குறிக்கின்றனர்.


E-fax : மின் தொலைநகல்.


E-mail : மின் அஞ்சல்.


E-mail address : மின்னஞ்சல் முகவரி.


E-mail greeting : மின்னஞ்சல் வாழ்த்துரை; பாராட்டுரை; வரவேற்பு.


easter egg : ஈஸ்டர் முட்டை : ஒரு கணினி நிரலில் மறைந்து கிடக்கும் பண்புக் கூறு. மறைந்து கிடக்கும் ஒரு கட்டளையாக இருக்கலாம். நகைச்சுவையான செய்தியாக இருக்கலாம். ஒர் அசைவூட்டமாக இருக்கலாம். அந்த மென்பொருளை உருவாக்கியவர்களின் பட்டியலாக இருக்கலாம். ஈஸ்டர் முட்டையை உடைத்துப் பார்க்க, பயனாளர் பெரும்பாலும் தெளிவற்ற வரிசையில் பல விசைகளை அழுத்த வேண்டியிருக்கும்.


E-BOMB : மின்குண்டு; மின்னஞ்சல் குண்டு : மின்னஞ்சல் குண்டு என்பதன் சுருக்கம். சில கணினிக் குறும்பர்கள் (Hackers) ஒரு கணினிப் பிணையத்தில் (குறிப்பாக இணையத்தில்) நடைபெறும் தகவல் போக்குவரத்தை நிலை குலையச் செய்வதற்குப் பயன்படுத்தும் உத்தி. ஏராளமான அஞ்சல் குழுக்களைக் குறிவைத்து அஞ்சல் அனுப்பி, அங்கிருந்து தொடரஞ்சலாக பிற அஞ்சல் குழுக்களுக்கும் அனுப்பச் செய்து, பிணையப் போக்குவரத்தையும், கணினி சேமிப்பகங்களையும் அஞ்சல் போக்குவரத்தால் நிரம்பி வழியுமாறு செய்து நிலைகுலையச் செய்வர்.


e-cash : மின் பணம்.


.ec: இசி : ஒர் இணையதள முகவரி. ஈக்குவாடர் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப் பெயர்.


echoplex : எதிரொலிச் சரிபார்ப்பு : தகவல் தொடர்பில் பிழை கண்டறியப் பயன்படும் ஒரு நுட்பம். தகவலைப் பெறும் நிலையம், பெற்ற தகவலை மீண்டும், அனுப்பிய நிலையத்துக்குத் திருப்பியனுப்பும். அதனைத் திரையில் கண்டு, தகவல் துல்லியமாகப் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.


edge connection socket : விளிம்பு இணைப்பு பொருத்துவாய்; விளிம்பு இணைப்பு குதை குழி.


edit : தொகு; சீர்மை செய்தல்.


edit data source: மூலத் தரவைத் தொகு.


editing keys : தொகுத்தல் விசைகள்: ஆவணத்தில் திருத்தம் செய்து தொகுக்கப் பயன்படும் விசைத் தொகுதி சில விசைப்பலகைகளில் இருப்பதுண்டு. விசைப்பலகையின் முதன்மைப் பகுதிக்கும் எண்விசைத் திண்டுவுக்கும் இடையில் இருக்கும். தொகுத்தல் விசைகள் மூன்று இணைகளாக இருக்கும். செருகு (Insert) நீக்கு (Delete); முகப்பு (Home) - இறுதி