பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

edit play list

163

EEMS


(End); முந்தய பக்கம் (Page Up) - பிந்தைய பக்கம் (Page Down).


edit play list : இயங்கு பட்டியலைத் தொகு.


edit query : வினவல் தொகு.


editing : தொகுப்பாக்கம்.


editing terminal : திருந்து முனையம்; தொகுப்பு முனையம்.


.edmonton.ca : .எட்மாண்டன்.சிஏ : இணையத்தில், ஒர் இணையதள முகவரி கனடாவிலுள்ள எட்மான்டனில் உள்ளது என்பதைக் குறிக்கும் புவிப்பிரிவுப் பெருங்களப் பெயர்.


EDO DRAM : ஈடோ டி'ரேம் : நீட்டித்த தகவல் வெளியீடு இயங்குநிலை குறிப்பின்றி அணுகு முகவரி என்று பொருள்படும் ‘Extended Data Out Dynamic Random Access Memory' என்ற சொல்தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். டி'ரேமை விட வேகமாகப் படிக்க முடிகிற ஒருவகை நினைவகம். முந்தைய சுழற்சியில் ஒரு விவரத்தைப் படித்துக் கொண்டிருக்கும்போதே, புதிய படிப்புச் சுழற்சியைத் தொடங்க அனுமதிக்கும் செயல். இது, ஒட்டு மொத்தமாக கணினியின் செயல் திறனை அதிகமாக்கும்.


effective data transfer rate : செயல்படு தகவல் மாற்று வீதம்.


effects : விளைவு; செயல்விளைவு.


efficiency : இயங்குதிறம்; வினைத்திறன்.


eighty-column display : எண்பது நெடுக்கை திரைக்காட்சி, எண்பது எழுத்துக் காட்சி.


EDO RAM : ஈடோ ரேம் : நீட்டித்த தகவல் வெளியீடு குறிப்பின்றி அணுகு நினைவகம் என்று பொருள்படும், Extented Data Out Random Access Memory என்ற சொல் தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இயங்குநிலை ரேமில் ஒருவகை. அடுத்த நினைவக அணுகல் தொடங்கும்போது, மையச் செயலகத்துக்குத் தகவலைத் தயாராக வைத்திருக்கும். இதனால் கணினிச் செயல்பாட்டு வேகம் அதிகரிக்கிறது. பென்டியம் கணினிகளில் இன்டெலின் டிரைட்டன் சிப்புத் தொகுதி மற்றும் டி'ரேம் உண்டு.


.edu : இடியு : இணையக் களப் பெயர் முறைமையில் உயர்நிலைக் களம். கல்வி நிலையங்கள் தம் தளப்பெயர்களில் பின்னொட்டாக இப்பெயரைச் சேர்த்துக் கொகின்றன. (எ-டு) www.annanuniv.edu. அமெரிக்காவில், பால்வாடி முதல் உயர்நிலைப் பள்ளிக் கல்வி வரை அளிக்கும் கல்விக் கூடங்கள், கே12.யுஎஸ் என்னும் உயர்நிலைக் களப் பெயரைப் பயன்படுத்திக் கொள்கின்றன. அல்லது வெறுமனே யுஎஸ் என்று பயன்படுத்துகின்றன.


EEMS : இஇஎம்எஸ் : மேம்படுத்திய விரிவாக்க நினைவக வரன்முறை என்று பொருள்படும் Enhanced Expanded Memory Specification என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். மூலமான விரிவாக்க நினைவக வரையறைகளை (EMS) மேம்படுத்தி உருவாக்கப்பட்டது. இஎம்எஸ்ஸின் 3ஆம் பதிப்பு தகவல் சேமிப்பையும், நான்கு பக்கச் சட்டங்களையுமே (Frames) அனுமதிக்கும். ஆனால் இஇஎம்எஸ், 64 பக்கங்களை அனுமதிப்பதுடன் நிறைவேற்றப்பட வேண்டிய ஆணைத் தொகுதிகளை விரிவாக்க நினைவகத்தில் இருத்தவும்