பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

extended characters

179

entended VGA


128 முதல் 255 வரை (8 பிட்டுகள்) அரிதாகப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மதிப்புகளில் பயன்படுத்தப் படும் குறியீட்டுத் தொகுதிகள் நீட்டித்த ஆஸ்க்கி எனப்படுகின்றன. இவை பெரும்பாலும் கணினிக்கு கணினி வேறுபடுகின்றன. ஆங்கிலம் தவிர வேறுபட்ட மொழியாளர்கள் தத்தம் மொழியின் எழுத்துகளை இந்தப் பகுதியில் வைத்துக் கொள் கின்றனர். அல்லது உச்சரிப்பு எழுத்துகள், வரைகலை வடிவங்கள், சிறப்புக் குறியீடுகளையும் வைத்துக் கொள்ள முடியும்.


extended characters : நீடித்த குறியீடுகள், நீட்டித்த எழுத்துகள்: 128 முதல் 255 வரையுள்ள ஆஸ்கி மதிப்புக் கொண்ட எழுத்து வடி வங்கள். விரிவாக்க ஆஸ்கி எட்டு துண்மி(பிட்)களைக் கொண்டிருக்கும். பெரும்பாலும் பிறமொழி எழுத்துகள், பட உருவங்களை உருவாக்கும் குறிகள், உச்சரிப்பைக் குறிக்கும் சிறப்பு அடையாளங் களைக் கொண்டிருக்கும்.


extended edition : நீட்டித்த பதிப்பு : உள்ளிணைந்த தரவுத் தளம், தகவல் தொடர்பு வசதிகள் கொண்ட ஒஎஸ்/ 2 இயக்க முறையின் பதிப்பு. ஐபிஎம் உருவாக்கியது.


Extended Graphics Array : நீட்டித்த வரைகலைக் கோவை : 1990ஆம் ஆண்டில் ஐபிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்திய, வரைகலைக் கட்டுப்படுத்தி மற்றும் திரைக்காட்சி முறை வடிவமைப்புக்கான உயர் நிலை செந்தரம். இதன்படி 640x480 படப்புள்ளித் தெளிவு, 65,536 வண்ணங்கள் பெறலாம். அல்லது 1,024x768 தெளிவும் 256 வண்ணங்களும் பெறலாம். பெரும்பாலும் பணி நிலையக் (work station) கணினிகளில் பயன்படுகின்றன.


extended memory specification : நீட்டித்த நினைவக வரன்முறை (இஎம்எஸ்) : லோட்டஸ், இன்டெல், மைக்ரோசாஃப்ட், ஏஎஸ்டி ஆய்வக நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியது. எம்எஸ்டாஸ் இயக்க முறைமை பயன்படுத்திக் கொள்ளாத நினைவகப் பரப்புகளையும், 1 எம்பிக்கு அதிகமான நீட்டித்த நினைவகத்தையும் இயல்புநிலைப் பயன்பாட்டுத் தொகுப்புகள் பயன்படுத்திக் கொள்வதற்கான மென் பொருள் இடைமுகம். நீட்டித்த நினைவக மேலாளர் (Extended Memory Manager) என்னும் சாதன இயக்கி நிரல் நினைவகத்தை மேலாண்மை செய்யும். தேவையானபோது இதனை நிறுவிக் கொள்ளலாம். குறிப்பிட்ட பயன் பாட்டுத் தொகுப்பு, இயக்கி நிரல் மூலமாக கூடுதல் நினைவகப் பகுதியை அணுகிக் கொள்ளும்.


extended VGA : நீட்டித்த விஜிஏ : ஒளிக்காட்சி வரைகலைக் கோவை (Video Graphics Array) தர வரையறைகளின் மேம்பட்ட வடிவம். இது, ஒரு படிமத்தை 800x600 முதல் 1600x1200 வரை படப்புள்ளித் தெளிவுடன் காட்ட வல்லது. ஒரு கோடியே 67 இலட்சம் (2') வண்ணங்கள் கொண்ட நிறமாலை யைப் பெற முடியும். இந்த நிற மாலையை ஒரு சாதாரண மனிதர் வேறுபடுத்திப் பார்க்கக்கூடிய அளவுக்கு ஒரு கோடியே 90 இலட்சம் வண்ணங்களைக் கொண்டதாக ஆக்க முடியும். எனவே இது, தொடர் முறை (Analog)தொலைக்காட்சிக்கு