பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

file management 186 file sharing



file management: கோப்பு மேலாண்மை.

file marker, end of: கோப்பு முடிவுக் குறி. file, multi-reel : பல் சுருள் கோப்பு. file open : கோப்புத் திறப்பு file recovery  : கோப்பு மீட்பு இழப்பு போன அல்லது படிக்க முடியாத வட்டுக் கோப்புகளை மீட் டெடுக்கும் செயல்முறை. பல்வேறு காரணங்களினால் கோப்புகள் தொலைந்து போகலாம். கவனக் குறைவாக அழித்துவிடல், கோப்பு பற்றி எழுதி வைக்கப்பட்டுள்ள விவரங்களுக்கு பாதிப்பு ஏற்படல், வட்டு பழுதடைதல் போன்ற காரணங்களினால் நாம் கோப்பு களை இழக்க நேரிடுகிறது. ஒரு கோப்பினை அழிக்கும்போது அதன் விவரங்கள் அழிக்கப்படுவதில்லை. அந்த இடம் பிற கோப்புகளுக்குக் கிடைக்கும். கோப்பு விவரங்கள் எழுதப்பட்ட இருப்பிடங்களை அடையாளம் காணமுடிந்தால் ஒட்டு மொத்தக் கோப்பையும் மீட்டுவிட முடியும். பழுதான கோப்புகளைப் பொறுத்தமட்டில், வட்டில் குறிப் பிட்ட பகுதியில் இருக்கும் விவரத் தைப் படித்து வேறொரு வட்டில் அல்லது கோப்பில் ஆஸ்கி (ASCII) அல்லது இரும/பதினறும எண்ணுரு வில் எழுதிக்கொள்ளும் நிரல்கள் உள்ளன. எனினும் இந்த முறையில் மூலத்தகவலை அப்படியே பெறு வது இயலாது. இழந்த கோப்புகளை மீட்பதற்குச் சிறந்த வழிமுறை அவற்றை காப்பு நகலிலிருந்து (Backup) பெற்றுக் கொள்வதேயாகும்.

file fragmentation கோப்புக் கூறாக்கம் : 1. ஒரு கோப்பின் விவரங் கள் வட்டில் தொடர்ச்சியாக எழுதப்

பதியப்பட்டுள்ளது என்கிற விவரம் ஒர் அட்டவணையில் எழுதப்படு கிறது. இதன் காரணமாய் வட்டில் எழுதப்படாத இடங்களும் தொடர்ச்சியாக இருப்பதில்லை. வட்டு நிறைந்து போகின்ற நிலை யில் கோப்பினை எழுதவும் படிக் கவும் அதிக நேரம் ஆவதுண்டு. இவ்வாறு கூறுகளாக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களை ஒரளவு வரிசையாக எடுத்தெழுது வதற்கென பயன்பாட்டு நிரல்கள் உள்ளன. 2. ஒரு தரவுத் தளத்தில் அட்டவணைக் கோப்பில் (Tables) ஏடுகள் (Records) வரிசையாகப் பதிவு செய்யப்படுவதில்லை. அவ்வப்போது ஏடுகளை அழிக்கிறோம், சேர்க் கிறோம். இதனால் ஏடுகள் கூறாகிக் கிடக்கும். ஆனால் பெரும்பாலான தரவுத் தள தொகுப்புகளில் ஏடுகளை வரிசைப்படுவதற்கென பயன்பாட்டு நிரல்கள் உள்ளன.

file retrieval : கோப்புக் கொணர்தல் : ஒரு தகவல் கோப்பினை, சேமித்து வைக்கப்பட்ட இடத்திலிருந்து அதனைப் பயன்படுத்த விருக்கும் கணினிக்குக் கொணரும் நடவடிக்கை.

file, sequential : தொடரியல் கோப்பு file sharing : கோப்பு பகிர்வு: பிணையங்களில் மையக் கணினி அல்லது வழங்கன் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட கோப்பினைப் பல்வேறு பயனாளர் களும் ஒரே நேரத்தில் பார்வையிட, திருத்த, வசதி இருக்க வேண்டும். இவ்வாறு ஒரே நேரத்தில் ஒரு கோப்பினை பலர் கையாள்வது