பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

format, address

194

forward



format, address : முகவரி வடிவ அமைப்பு.

format, addressless instruction : முகவரியிலா ஆணை வடிவம்.

format bar : வடிவமைப்புப் பட்டை : ஒர் ஆவணத்திலுள்ள எழுத்துருவை, அதன் உருவளவை, பாணியை, நிறத்தை மாற்றுவது போன்ற,பணிகளுக்கென ஒரு பயன்பாட்டுத் தொகுப்பில் இருக்கும் ஒரு கருவிப் பட்டை.

format card : அட்டை வடிவம்.

format painter : வடிவம் தீட்டி.

format, print : அச்சு வடிவமைப்பு.

format, record : ஏட்டு வடிவமைப்பு.

formatting : வடிவமைத்தல்.

formatting characters: வடிவமைப்பு எழுத்துகள்.

formating bar:வடிவமைப்புப் பட்டை .

formatting tool bar : வடிவமைப்புக் கருவிப் பட்டை.

form background: படிவப் பின்னணி; படிவப் பின்புலம்.

form feed (FF) : படிவச் செலுத்துகை.

form file : படிவக் கோப்பு.

form design : படிவ வடிவமைப்பு.

form letter : படிவக் கடிதம் : ஒரு கடிதத்தைப் பலருக்கும் அனுப்பி வைக்கத் தயாரிக்கும் முறை, அஞ்சல்-இணைப்பு (mail-merge) என்றழைக்கப்படுகிறது. அனைத்துச் சொல் செயலி (word processor) தொகுப்புகளிலும் இத்தகைய வசதி உண்டு. பலரின் முகவரிகள் ஒரு தரவுத் தளத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கும். அனைவருக்கும் அனுப்ப ஒரேயொரு கடித ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கும். அஞ்சல்இணைப்பு நிரலை இயக்கியதும், தனித்தனி முகவரிகளுடன் கடிதம் தயாராகி விடும். கடிதத்தில் முகவரி நாம் குறிப்பிடும் இடத்தில் செருகப்பட்டிருக்கும். தனித்தனிக் கடிதங்களை அச்சிட்டு அனைவருக்கும் அனுப்பிவிட முடியும். அஞ்சல் -இணைப்பு மூலம் உருவாக்கப் படும் கடிதம் படிவக் கடிதம் என்றழைக்கப்படுகிறது.

form wizard : படிவ வழிகாட்டி.

forms : படிவங்கள்.

forms capolite browser : படிவம் காண்தகு உலாவி.


forms design :படிவ வடிவமைப்பு.

formula bar : வாய்பாட்டுப் பட்டை.

formulas : வாய்பாடுகள்.

fortune cookie : செல்வவளக் குக்கி; அதிர்ஷ்டக் குக்கி : பொன்மொழிகள், வருவதுரைத்தல், நகைச்சுவை- இவற்றின் தொகுப்பிலிருந்து ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கணினித் திரையில் காண்பிக்கும் ஒருநிரல். யூனிக்ஸ் இயக்க முறைமையில் பல நேரங்களில், உள்துழையும்போதும் வெளியேறும் போதும் இதுபோன்ற குக்கிகள் செயல்படும்.

forum : மன்றம் : ஒரு குறிப்பிட்ட தலைப்பில் பயனாளர்கள் தத்தம் கருத்துகளை எழுத்துவடிவில் தெரி வித்துக் கலந்துரையாட ஒர் ஊடகத்தைப் பல்வேறு நிகழ்நிலை (online) சேவைகள் வழங்கி வருகின்றன. இணையத்தில் பெருமளவு காணப்படும் மன்றங்கள் யூஸ்நெட்டில் செயல்படும் செய்திக் குழுக்களாகும்.

forward :முன்னோக்கு.