பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

I

225

ICMP


I

I/O Control System (IOCS): உள்ளீடு/வெளியீடு கட்டுப்பாட்டு முறைமை.

IAC : ஐஏசி : தகவல் பகுப்பாய்வு மையம் எனப் பொருள்படும் Infromation Analysis Centre என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். கிடைக்கின்ற அறிவியல் தொழில்நுட்ப தகவல்களைப் பயன் படுத்திக்கொள்ள அமெரிக்க நாட்டின் பாதுகாப்புத்துறை உருவாக்கியுள்ள பல்வேறு அமைப்புகளுள் இதுவும் ஒன்று. வரலாற்று, தொழில்நுட்ப மற்றும் அறிவியல் தகவல்கள் உட்பட ஒட்டுமொத்த அறிவுத் தளங்களை (knowledge bases) உருவாக்கிப் பராமரிக்கும் பணியை ஐஏசி-க்கள் செய்கின்றன. மேலும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான பகுப்பாய்வுக் கருவிகளையும் நுட்பங்களையும் உருவாக்கிப் பராமரிக்கும் பணியையும் மேற்கொள்கின்றன.

IBM : Information Business Machine என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். முன்னணி கணினி நிறுவனம்.

l-BEAM : ஐ-உருக்குறி : விண்டோ வலில் சொல்செயலி போன்ற தொகுப்புகளில் உரையைத் தொகுக்கும்போது திரையில் தோற்றமளிக்கும் ஆங்கில ஐ-வடிவச் சுட்டுக்குறி. இக்குறியானது, ஆவணத்தில் ஒரு பகுதியை உட்செருக, அழிக்க, மாற்ற, இடம் பெயர்த்தெழுதருக்கும் இடத்தைச் சுட்டுகிறது. ஆங்கில எழுத்து I போலத் தோற்றமளிப்பதால் இவ்வாறு பெயர்பெற்றது.


IBM AT : ஐபிஎம் ஏட்டி : 1984இல் அறிமுகப்படுத்தப்பட்ட சொந்தக் கணினிகளில் ஒருவகை. ஐபிஎம் நிறுவனத்தின் பீசி/ஏட்டி (AT-Advance Technology) வரையறுப்புகளுக்கு ஒத்தியல்பானது. முதல் ஏட்டீ கணினி இன்டெல் 80286 நுண்செயலியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னோடியாயிருந்த எக்ஸ்ட்டி (XT) கணினியை வேகத்தில் விஞ்சியது.

IBM PC : ஐபிஎம் பீசி : ஐபிஎம் சொந்தக் கணினி எனப் பொருள் படும் IBM Personal Computer என்பதன் சுருக்கம். 1981இல் அறிமுகப் படுத்தப்பட்ட சொந்தக் கணினிகளுள் ஒருவகை. ஐபிஎம்மின் பீசி வரையறுப்புகளுக்கு ஒத்தியல்பானது. முதல் பீசி, இன்டெல் 8088 நுண்செயலியை அடிப்படையாகக் கொண்டது. கணினி உலகில் பல ஆண்டுகளாக ஐபிஎம் பீசிகள்தாம், உண்மையில் பீசி மற்றும் நகலிகளுக்கு அடிப்படையாக விளங்கின. ஐபிஎம் வரையறுப்புகளின்படி அமைந்த கணினிகள் பீசி-ஒத்தியல்பிகள் (PC-compatibles) என்று வழங்கலாயின.

ICMP : ஐசிஎம்பி : இணையக் கட்டுப்பாட்டு செய்தி நெறிமுறை எனப் பொருள்படும் Internet Control Message Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐஎஸ்ஓ/ஒஎஸ்ஐ 3-வது அடுக்கான பிணைய அடுக்கில், பிழைதிருத்தம் மற்றும் ஐபீ (IP-Internet Protocol) பொதி செயலாக்கத்திற்குத் தேவை