பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

image compression

229

imaging



உள்ளீடு செய்யப்பட்ட ஒர் படிமத்தின் நிறங்களை அப்படியே வெளியீடாகத் தருவதற்காகச் செய்யப்படும் திருத்தச் செயலாக்கம்.

image compression : படிம இறுக்கம்; ஒரு வரைகலை படிமக் கோப்பினைச் சேமிக்க தகவல் இறுக்க நுட்பங்களைப் பயன்படுத்துதல். இறுக்கப்படாத வரைகலைக் கோப்புகள் சேமிப்பகத்தில் அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும். எனவே, படிம இறுக்கம், சேமிப்பக இடத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த உதவும்.

image editing :படிமத் திருத்தம் : ஒர் படிமத் தொகுப்பானில் ஒரு பிட்மேப் படிமத்தை மாற்றுதல் அல்லது திருத்துதல்.

image editor உருத்தோற்றத் தொகுப்பான்; படிமத் தொகுப்பான் : பிட்மேப் படிமங்களைத் திருத்தியமைத்துச் சேமிக்க வகைசெய்யும் பயன்பாட்டு நிரல். வருடுபொறியில் வருடப்பட்ட ஒளிப்படங்களை (photographs) வடிகட்டல் மற்றும் வேறுபல செயல்கூறுகள் மூலம் திருத்தி, செழுமைப்படுத்த முடியும். புதிய படிமங்களை, படங்களை இதில் உருவாக்க முடியாது. அதற்கென தனியான மென்பொருள் தொகுப்புகள் உள்ளன.

image map : படிமக் குறிபடம் : ஒரு வலைப்பக்கத்திலுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மீத் தொடுப்புகளைக் கொண்டிருக்கும் ஒரு படிமம். ஒரு படிமத்தின் மீது வேறுவேறு பகுதிகளில் பயனாளர் சுட்டியால் சொடுக்கும்போது அதே வலைப் பக்கத்தின் வேறு பகுதிக்கோ, வேறொரு வலைப் பக்கத்துக்கோ, வேறொரு கோப்புக்கோ இட்டுச் செல்லப்படுவார். படிமக் குறிபடம் பெரும்பாலும் ஒர் ஒளிப்படமாகவோ, ஒர் ஒவியமாகவோ, பல்வேறு வரைபடங்களின்/ஒளிப்படங்களின் கூட்டாகவோ இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட வலைத்தளத்தின் பல்வேறு வளங்களைச் சுட்டும் குறியீடுகளாக இப்படங்கள் அமைகின்றன. படிமக் குறிபடங்கள் சிஜீஐ (CGl) நிரல் மொழியின் மூலம் உருவாக்கப் படுகின்றன. சொடுக்குறு குறிபடம் என்றும் இவை அழைக்கப்படுகின்றன.

imaginary number :கற்பனை எண் : ஒரு மெய்யெண், (real number) மற்றும் i (12-ன் மதிப்பு - 1 ஆகும்) ஆகியவற்றின் பெருக்குத் தொகையாகக் குறிப்பிடப்படும் எண் கற்பனை எண் ஆகும். ஒரு மெய்யெண், ஒரு கற்பனை எண் ஆகியவற்றின் கூட்டு கலப்பு (complex number) எனப்படுகிறது. கலப்பெண், a+ib என்ற வடிவில் எழுதப்படும். a, b ஆகியவை மெய்யெண்கள். பொதுவாக நம் வாழ்வில் கற்பனை எண்களை நாம் சந்திப்பதில்லை. நீளம் 15i அடி என்றோ, வினாடிக்கு 150i மெகாபிட் என்றோ நாம் பயன்படுத்தப் போவதில்லை. ஆனால், மின் பொறியியலில் சிலவகை இணை எண்ணிக்கைகள் ஒரு கலப்பெண்ணிலுள்ள மெய் மற்றும் கற்பனைப் பகுதிகளைப்போலக் கணித முறை யில் கணக்கிடப்படுகின்றன.

imaging : உருத்தோற்றி ; படிம மாக்கம் : ஒரு வரை கலை உருத் தோற்றத்தை படமாக்கி, சேமித்து, திரையிட்டு, அச்சிடும் செயல் பாடுகள் உள்ளடக்கிய செயலாக்கம்.