பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

inline image

235

input/output controller


திறப்பு செயல்பாட்டினைத் தவிர்ப்பதன் மூலம், உள்ளமை வரை கலைப் படங்கள் ஹெச்டிஎம்எல் (HTML) ஆவணத்தை அணுகுதல் மற்றும் நினைவகத்தில் ஏற்றுதல் போன்ற செயல்பாடுகள் விரைவாக நடைபெறும்.

inline image: 2 உள்ளமைப்பு படிமம்: ஆவணத்தில் உரைப்பகுதியினூடே உள்ளமைக்கப்பட்ட ஒரு படிமம். வலைப்பக்கங்களில் இது போன்ற படிமங்களை அதிகம் காணலாம்.

inner join : உள் இணைப்பு : உறவு முறைத் தரவுத் தள மேலாண்மைத் தொகுப்புகளில் பயன்படுத்தப்படும் செயலாக்கம். இரண்டு அட்டவணை களை ஒரு முதன்மைப் புலம் மூலமாக உறவுபடுத்தி இரண்டிலிருந்தும் தகவலைப் பெறும் முறை. இடப்புற அட்டவணையிலுள்ள அனைத்து ஏடுகளும் அவற்றோடு உறவுடைய வலப்புற அட்டவணையிலுள்ள ஏடுகளும் விடையாகக் கிடைக்கும்.

input bound :உள்ளீட்டு வரம்பு/ எல்லை.

input buffer : உள்ளீட்டு இடையகம் : ஒரு கணினிக்குள் உள்ளீடாகச் செலுத்தப்படும் தகவல்களைத் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்கென கணினி நினைவகத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ஒரு பகுதி.

input job stream: உள்ளீட்டுப் பணி தாரை: உள்ளிட்டுப் பணியோட்டம்.

input mask :உள்ளீட்டு மறைப்பு.

input/output buffer : உள்ளீட்டு/வெளியீட்டுஇடையகம் : ஒரு கணினியில் உள்ளீடாகத் தரப்படும் தகவல்களையும், வெளியீடாகப் பெறப்படும் தகவல்களையும் தற்காலிகமாகச் சேமித்து வைப்பதற்காக நினைவகத்தில் ஒதுக்கப்படும் ஒரு பகுதி. மையச் செயலி நேரடியாக உள்ளிட்டு/வெளியீட்டு சாதனங்களுடன் தகவல் பரிமாற்றம் மேற்கொண்டால் செயலியின் பொன்னான நேரம் வீணாகிப் போகும். இடைநிலை நினைவகத்தில் எழுதிவிட்டு செயலி வேறு பணியை மேற்கொள்கிறது என்பதால் அதன் நேரம் பயனுள்ள முறையில் செலவாகிறது.

input output bus : உள்ளீட்டு/வெளியீட்டுப் பாட்டை : ஒரு கணினியின் உள்ளமைப்பில் மையச் செயலிக்கும் பிற உள்ளிட்டு, வெளியீட்டு சாதனங்களுக்குமிடையே தகவல்களைப் பரிமாறிக்கொள்ளப் பயன் படுத்தப்படும் வன்பொருளாலான மின்வழித் தொகுதி.

input/out put channel : உள்ளீட்டு/ வெளியீட்டுத் தடம்.

input/output controller : உள்ளீட்டு/வெளியீட்டுக் கட்டுப்படுத்தி : ஒரு கணினியில் உள்ளிட்டு/வெளியீட்டுச் சாதனங்களுக்கும் மையச் செயலிக்குமிடையே நடைபெறும் தகவல் பரிமாற்றத்துக்கு உதவுகின்ற மின்சுற்று அமைப்பு. உள்ளீட்டு/வெளியீட்டுப் பணிகளை மேற்பார்வையிட்டுத் தகவலைப் பெறுதல், வெளியிடுதல் ஆகிய செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டு, செயலியானது தன் நேரத்தைப் பிற பணிகளில் ஈடுபடுத்துவதற்கு உதவி செய்கிறது. நிலைவட்டு இயக்ககக் கட்டுப் படுத்திகளை (Hard Disk Drive Controllers) எடுத்துக்காட்டாகக் கூறலாம். பல கட்டுப்படுத்திகளுக்கு தகவலைப் பெற்றுக் கையாள்வதற்கு மென்பொருள் தேவைப்படுகிறது.