பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Interface Message Processor

240

International Tele


காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கும் பொருட்டு முகவரிகளை ஒழுங்கமைக் கின்ற ஒரு வழிமுறை.இடைப்பின்னல் நினைவகத்தில்,அடுத்தடுத்த நினைவக இருப்பிடங்கள் சில்லுவின் வேறுவேறு இடைவரிசைகளில் இருப்பதுண்டு.மையச்செயலியானது ஒரு பைட்டை அணுகியபின்,அடுத்த பைட்டை அணுகுவதற்கு முன்பாக,ஒரு முழு நினைவகச் சுழற்சி முடியும்வரை காத்திருக்க வேண்டியதில்லை.

Interface Message Processor(IMP):இடைமுக செய்திச்செயலி.

intermediate code generator:இடைநிலைக் குறிமுறை உருவாக்கி.

intermediate language(IL):இடைநிலை மொழி:பொதுவாக,ஒரு கணினி மொழி உயர்நிலை மொழியாகவும்,செயல்படுத்த வேண்டிய இலக்கு மொழி எந்திர மொழியாகவும் இருப்பதுண்டு.அதாவது,மொழிமாற்றிகள் (compilers)பெரும்பாலும் உயர்நிலைக் கணினி மொழி நிரல்களை எந்திர மொழிக்கு மாற்றியமைக்கின்றன.ஒருசில உயர்நிலை மொழி மாற்றிகள் முதலில் அசெம்பிளி மொழிக்கு மாற்றிப் பின் எந்திரமொழிக்கு மாற்றுகின்றன.இதில் அசெம்பிளி மொழி இடைநிலை மொழியாகப் பயன்படுகிறது.

intermediate tool:இடைநிலைக் கருவி.

intermittent:விட்டு விட்டு:தகவல் சமிக்கை அல்லது தொலைபேசி இணைப்பு தொடர்ந்து கிடைக்காமலும் அதேவேளையில் துண்டிக்கப் படாமலும் குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் விட்டுவிட்டுச் செயல்படுதல்.

internal and external:அகம்-புறம்.

Internal document:அகநிலை ஆவணம்.

internal or external command:அகக்கட்டளை அல்லது புறக்கட்டளை.

internal schema:அகப்பொழிப்பு; அக உருவரை:ஒரு தரவுத் தளத் திலுள்ள கோப்புகள்-அவற்றின் பெயர்கள்,அவற்றின் இருப்பிடம்,அணுகும் முறைகள்,தகவல் தருவித்தல் போன்ற அனைத்தையும் பற்றிய ஒரு பார்வை அல்லது நோக்கு.அன்சி/எக்ஸ்3/ஸ்பார்க் ஆகியவை ஏற்கின்ற முப்பொழிப்புக் கட்டுமானம்.கொடாசில்(CODASIL),டிபிடீஜி(DBTG) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட முறைமைகளில் உள்ள பொழிப்புடன் தொடர்புடையது அகப்பொழிப்பு ஆகும்.பகிர்ந்தமை தரவுத்தளத்தில்,வெவ்வேறு இருப்பிடங்களில் வேறு வேறு அகப்பொழிப்புகள் இருக்க முடியும்.

international data links:பன்னாட்டுத் தரவு இணைப்பு.

International Forum for Information Technology in Tamil(INFITT):உலகத் தகவல் தொழில் நுட்பத் தமிழ்மன்றம்.சுருக்கமாக"உத்தமம்"என வழங்கப்படுகிறது.

international network:உலகளாவிய பிணையம்; பன்னாட்டுப் பிணையம்.

International Tele-communications பnion:பன்னாட்டுத் தொலைத் தொடர்புக் குழுமம்; சர்வதேச தொலை தொடர்புச் சங்கம்: பொதுத் துறை மற்றும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளுக்கான பரிந்துரைகள்