பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

JDK

254

journal


பீசியை ஒத்தவை ஜாவா முனையங்கள்.

JDK : ஜாவா மென்பொருள் உருவாக்கக் கருவித் தொகுதி.

jerk : குலுக்கம்.

jewel box : வட்டுப்பெட்டி : ஒரு குறு வட்டினை பாதுகாப்பாக வைக்கப் வட்டுப்பெட்டி பயன்படுத்தப்படும் சிறிய பிளாஸ் டிக் பெட்டி.

jiff : ஜிஃப் : ஜேபெக் (JPEG) கோப்புப் பரிமாற்ற வடிவாக்கத்தில் அமைந்த வரைகலைப் படிம கோப்புகளைக் குறிக்கும் வகைப் பெயர். (File Extension).

jm : ஜேஎம் : இணையத்தில் ஒர் இணைய தளம் ஜமைக்கா நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிப்பிடும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

JΜΑΡΙ : ஜேஎம்ஏபீஐ : ஜாவா மேலாண்மைப் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் என்று பொருள்படும் Java Management Application Programming Interface என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர்.

jo : ஜேஓ : இணையத்தில் ஒர் இணைய தளம் ஜோர்டான் நாட்டைச் சேர்ந்தது என்பதைக் குறிக்கும் பெரும் புவிப்பிரிவுக் களப்பெயர்.

job, batch : தொகுதிச் செயற்பாடு; தொகுதிப் பணி.

job oriented terminal : பணிசார்ந்த முனையம்.

job turnaround time: பணி முடிக்கும் நேரம்; பணிச் செயலாக்க நேரம்.

join : ஜாய்ன்; சேர்ப்பு : 1. ஒரு தரவு தளத்தில் அட்டவணை மீது செயல் படுத்தப்படும் ஒரு கட்டளை. இரண்டு அட்டவணைகளை இணைத்து மூன்றாவதாக ஒர் அட்ட வணையை உருவாக்கும் கட்டளை. இரு அட்டவணைகளிலும் முதன்மைப் புலங்களை (key fields) ஒப்பிட்டு ஒன்றாயிருக்கும் ஏடுகளை இணைத்து மூன்றாவது அட்டவணை உருவாக்கப்படுகிறது.

join condition : சேர்ப்பு நிபந்தனை.

joliet : ஜோலியட் : ஐஎஸ்ஓ 9660 (1988) தரக் கட்டுப்பாட்டின் நீட்டித்த செந்தர வரையறைகள். நீண்ட கோப்புப் பெயர்களை ஏற்கின்றன. 8.3 எழுத்துப் பெயர் மரபுக்கு மாற்றானது. விண்டோஸ் 95 போன்ற இயக்க முறைமைகள் நீண்ட கோப்புப் பெயர்களை ஏற்கின்றன. இந்த முறைமைகளில் பயன்படுத்தக் கூடிய குறுவட்டுகளில் இந்தப் கோப்பு வடிவாக்கம் பயன்படுத்தப்படுகிறது.

journal : ஆய்வேடு; தாளிகை; குறிப்பேடு: ஒரு கணினியில் அல்லது ஒரு பிணையத் தில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை கணினியிலேயே பதிவுசெய்து வைத்துக்கொள்ளும் குறிப்பேடு. ஒரு